MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • நாய் வளர்ப்பவர்களுக்கு ஆப்பு! இதை செய்யாவிட்டால் ரூ.3,000 அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி!

நாய் வளர்ப்பவர்களுக்கு ஆப்பு! இதை செய்யாவிட்டால் ரூ.3,000 அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி!

சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

1 Min read
Author : Rayar A
Published : Sep 04 2025, 01:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தெரு நாய்கள் அட்டகாசம்
Image Credit : Getty

தெரு நாய்கள் அட்டகாசம்

நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தினம் தினம் தெரு நாய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் தெரு நாய்களின் ஆதிக்கம் அதிகம். குழந்தைகள், பெண்களை தெரு நாய்கள் விரட்டி விரட்டிக் கடிக்கின்றன. தெரு நாய்களால் சாலை விபத்துகளும் ஏற்படுகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தீராத தெரு நாய்கள் தொல்லை
Image Credit : X

தீராத தெரு நாய்கள் தொல்லை

தெரு நாய்கள் மட்டுமின்றி வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களும் மக்களுக்கு சில நேரங்களில் ஆபத்தாக உள்ளது. சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் வெளிநாட்டு உயர்ரக நாய்களால் பலரை கடித்துள்ள சம்பவங்கள் நடந்துள்ளன. அண்மையில் விஜய் டிவியின் நீயா? நானா? நிகழ்ச்சியில் தெரு நாய்கள் விவகாரம் பேசப்பட்டு பெரும் வைரலாகி விட்டது. தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதே வேளையில் தெரு நாய்களை அப்புறப்படுத்த நாய் பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

34
சென்னையில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
Image Credit : AI Meta

சென்னையில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில் தெரு நாய்களுக்கு சென்னை மாநகராட்சி ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகிறது. இதற்காக மொத்தம் 30 கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் குழுக்கள் நேரடியாக தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகின்றனர். தடுப்பூசி செலுத்தி அதற்கான அடையாளமாக நாய்களுக்கு அடையாள மை வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

44
வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப்
Image Credit : AI Meta

வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப்

இந்நிலையில், சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என்று மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த வேண்டும். மேலும் வளர்ப்பு நாய்களை வெளியே அழைத்து செல்லும்போது நாய்களன் வாயை மூடியிருக்க வேண்டும். இதை செயல்படுத்த தவறினால் நாய் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை
நாய்கள்
தமிழ்நாடு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay order: நேபாள பெரு வெள்ளம்..டெல்லி செல்லும் 4 தமிழக அமைச்சர்கள்!
Recommended image2
Chennai Weather: சுதந்திர தினம் வரை மழைதான்! தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும்?
Recommended image3
Tomato Price Today: தாறுமாறா குறைந்த தக்காளி விலை.! இனி தினமும் தக்காளி தொக்குதான் வீட்டுல.!
Related Stories
Recommended image1
என்னை மன்னிச்சுடுங்க! 'அந்த' சேனல் நான் பேசுனத முழுசா போடல! பல்டி அடித்த நாய் பிரியர் படவா கோபி!
Recommended image2
குழந்தைங்கள நாய் கடிச்சு கொதர்ர வரைக்கும் பெத்தவங்க எங்க போனீங்க? நடிகை அம்மு கேட்கிறார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved