- Home
- Tamil Nadu News
- சென்னை
- சென்னையில் தெருநாய்கள் தொல்லை இனி இல்லை! மாநகராட்சி எடுத்த 'சூப்பர்' முடிவு! மக்கள் ஹேப்பி!
சென்னையில் தெருநாய்கள் தொல்லை இனி இல்லை! மாநகராட்சி எடுத்த 'சூப்பர்' முடிவு! மக்கள் ஹேப்பி!
சென்னையில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தெரு நாய்கள் தொல்லை கட்டுப்படுத்தப்பட உள்ளது.

Chennai Corporation To Vaccinate Stray Dogs Against Rabies
தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெகு நாய்கள் பெண்கள், குழந்தைகளை கடித்து வருகின்றன. மேலும் தெரு நாய்களால் சாலை விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. நாய்களின் அட்டூழியம் தாங்க முடியாததால் இரவு நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள் நிம்மதியாக சாலையில் நடமாட முடியவில்லை. தலைநகர் சென்னையிலும் நாய்களால் மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர்.
தெரு நாய்கள் தொல்லை
தெரு நாய்களை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்தார். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய, குறிப்பாக நகரப் பகுதிகளில், நாய்கள் இனப்பெருக்க கட்டுபாடு நடவடிக்கைகளை தீவிரமான முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு மையங்கள்
மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிதாக 10 நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு மையங்கள் உருவாக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், சென்னையில் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில் தெரு நாய்களுக்கு மெகா ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆகஸ்ட் 9ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி
அதாவது சென்னை மாநகராட்சி முழுவதும் 50 நாட்களில் 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 30 கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் குழுக்கள் நேரடியாக தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவார்கள் என அறிவிக்கபப்ட்டுள்ளது. நாள் ஒன்றிற்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி அதற்கான அடையாளமாக நாய்களுக்கு அடையாள மை வைக்கப்படும்.
தெரு நாய்கள் கருணைக் கொலை
தெரு நாய்களை பிடித்து கருத்தடை மையத்திற்குக்கொண்டு சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இப்போது தெருக்களுக்கே சென்று தடுப்பூசி போடப்படுகிறது. ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து இருந்தது. அதாவது பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் தெரு நாய்கள் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும்.
கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அந்த தெரு நாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என்று கால்நடைத் துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இப்படி தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

