சென்னையில் அதிர்ச்சி.. சவாரிக்கு வந்த பயணியின் விரலை கடித்து துப்பிய ஆட்டோ டிரைவர்.. நடந்தது என்ன?
சென்னையில் ஆட்டோவில் சவாரிக்கு வந்த பயணியின் சுண்டு விரலை ஆட்டோ ஓட்டுநர் கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் ராமு (51). இவர், கடந்த 19-ம் தேதி இரவு வேலை முடிந்து தனது வீட்டுக்கு செல்வதற்காக ஷேர் ஆட்டோ ஒன்றில் சென்றுள்ளார். அப்போது ஷேர் ஆட்டோ ஓட்டிய டிரைவர் உட்கார்ந்திருந்த சீட்டுக்கு பின்னால் தனது காலை வைத்தபடி பயணித்தார். இதற்கு ஆட்டோ ஓட்டுநர் சந்தானம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், இவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியது. ஆட்டோ டிரைவர் சந்தானம் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கம்பியை எடுத்து ராமுவை தாக்கியுள்ளார். ஆத்திரம் தீராத அவர் ராமுவின் கை சுண்டு விரலை கடித்து துப்பியுள்ளார்.
இதையும் படிங்க;- பெத்த இதே கையால.. ரத்தத்தோட ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போனேன்.. யாரும் உதவ முன் வரவில்லை.. தாய் கதறல்..!
இதனையடுத்து, ராமுவை உடனே மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் சந்தானத்தை கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.