- Home
- Tamil Nadu News
- சென்னை
- சென்னையில் மஜாவாக நடந்த விபச்**சாரம்! கல்லூரி மாணவர்கள் மட்டுமே டார்க்கெட்! எவ்வளவு ரூபாய் தெரியுமா?
சென்னையில் மஜாவாக நடந்த விபச்**சாரம்! கல்லூரி மாணவர்கள் மட்டுமே டார்க்கெட்! எவ்வளவு ரூபாய் தெரியுமா?
சென்னையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து பாலியல் தொழில் நடத்திய புரோக்கர் ராஜாவை போலீசார் கைது செய்தனர். வாட்ஸ் அப் குழு மூலம் வாடிக்கையாளர்களைப் பிடித்த இவர், இரண்டு இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்தது.

மசாஜ் சென்டர்
தலைநகர் சென்னையில் மசாஜ் சென்டர், ஸ்பா என்ற பெயரில் வறுமை மற்றும் பணத்தாசையை காரணம் காட்டி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காவல்துறை அவ்வப்போது கைது நடவடிக்கை மேற்கொண்டாலும் ஓய்ந்த பாடியில்லை.
காவல் ஆணையர் அருண்
இந்நிலையில் சென்னை பெருநகர காவல் எல்லையில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் செய்யும் நபர்களை கைது செய்ய காவல் ஆணையர் அருண் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ராதிகாவுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் பாலியல் புரோக்கர்கள் மற்றும் ஏஜெண்டுகள் மீது அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நெற்குன்றம் கோல்டலன் ஜார்ஜ் நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கல்லூரி மாணர்கள் பலர் வந்து செல்வதாக விபச்சார தடுப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
வீட்டில் பாலியல் தொழில்
அதன்படி நெற்குன்றம் கோல்டன் ஜார்ஜ் நகர், எட்டியப்பன் தெருவில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் மப்ட்டியில் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த வீட்டிற்கு இளைஞர்கள் வந்து சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த வீட்டில் பாலியல் தொழில் நடப்பது உறுதியானதை அடுத்து உடனே போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர்.
கல்லூரி மாணவர்கள்
அப்போது நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பாலியல் புரோக்கர் ராஜா(55) இரண்டு இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. உடனே ராஜாவை படித்து விசாரணை நடத்தியதில் நெற்குன்றத்தை சுற்றி அதிகளவில் பொறியியல் கல்லூரிகள் இருப்பதால் அப்பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, கல்லூரியில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
பாலியல் புரோக்கர்
அதற்காக தனியாக வாட்ஸ் அப் குழு அமைத்து, இளம் பெண்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்து யாருக்கு எவ்வளவு ரெட் என்று பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் புரோக்கர் ராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.