சென்னையில் எந்தெந்த ஏரியாக்களில் இன்று பவர் கட்? எத்தனை மணிநேரம் நேரம்?
சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். பெசன்ட் நகர், நேரு நகர், மேற்கு தாம்பரம், முகப்பேர் கிழக்கு உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும்.

கோடை வெயில்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வீட்டில் ஃபேன், ஏசி எந்நேரமும் ஒடிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக மின்தேவையும் அதிகரித்து வருகிறது.
மாதாந்திர பராமரிப்பு பணி
இந்நிலையில் துணை மின் நிலையங்களில் மாதந்திர பராமரிப்பு காரணமாக ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்பதை பார்ப்போம்.
பெசன்ட் நகர்
பெசன்ட் நகர் 3-வது அவென்யூ, 5-வது அவென்யூ, 4-வது மெயின் ரோடு, 32 முதல் 35 குறுக்குத் தெரு, ஆல்காட் குப்பம், கஸ்டம்ஸ் காலனி 1வது தெரு, திருவள்ளுவர் நகர், பஜனை கோவில் தெரு, ஊரு எல்லையம்மன் கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
நேரு நகர்
அஸ்தினாபுரம்
ராதாநகர், ஜிஎஸ்டி சாலை, பார்வதி மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
நேரு நகர்
ஆர்.பி.சாலை, அய்யாசாமி பள்ளி தெரு, ராஜாஜி தெரு, பட்டேல் தெரு, சங்கர்லால் தெரு, சிட்லாபாக்கம் பகுதி 1 முதல் மெயின் ரோடு, பழைய அஸ்தினாபுரம் சாலை, சந்தான கிருஷ்ணன் தெரு, மகாதேவன் தெரு மற்றும் ராமமூர்த்தி தெரு.
மேற்கு தாம்பரம்
கிருஷ்ணா நகர் 1 மற்றும் 8-வது தெரு, வெற்றி நகர், சுபாஷ் நகர், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், சரஸ்வதி நகர், பார்வதி நகர், ஸ்ரீராம் நகர் தெற்கு, ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதி, பாலகிருஷ்ணன் நகர்
முகப்பேர் கிழக்கு
வேணுகோபால் தெரு, பள்ளித் தெரு, சீயோன் தெரு, பஜனை கோயில் தெரு, பன்னீர் நகர், மொகப்பேர் மேற்குப் பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.