Chennai : சென்னையில் இந்த பகுதியில் எல்லாம் மின்சார ரயில்கள் ரத்து - முழு விபரம்
சென்னை மின்சார ரயில்கள் இந்த வழித்தடங்களில் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவை எந்தெந்த இடங்கள் என்பதை பார்க்கலாம்.
சென்னையில் மக்களின் அன்றாட போக்குவரத்து சேவையில் மின்சார ரயில்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. பல்வேறு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில் சேவை சனிக்கிழமை (ஜூன் 17) ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளியிடப்பட்ட செய்தி: சென்னை, தாம்பரம் பணிமனையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரு மாா்க்கத்திலும் இரவு 9 முதல் 12 மணி வரையிலான 16 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நேரத்தில் செங்கல்பட்டு, திருமால்பூரிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் 4 மின்சார ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும். மாற்று வசதி: பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரையிலிருந்து பல்லாவரத்துக்கு இரவு 9. 10, 9. 20, 9. 40, 10. 05, 10. 30, 11. 00, 11. 59 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
பல்லாவரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 9. 55, 10. 10, 10. 30, 10. 50, 11. 15, 11. 45 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும். மேலும் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டுக்கு இரவு 10. 15, 10. 45 மற்றும் 11. 40 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.