MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • அட! இந்தியா-ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் இவ்வளவு சீக்கிரம் தொடங்குதா? எதில் பார்க்கலாம்?

அட! இந்தியா-ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் இவ்வளவு சீக்கிரம் தொடங்குதா? எதில் பார்க்கலாம்?

இந்தியா-ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டி தொடங்கும் நேரம்? எந்த சேனலில் பார்க்கலாம்? என்ற விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Dec 13 2024, 05:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
India vs Australia Test Series

India vs Australia Test Series

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிந்து விட்டது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது.  அதே வேளையில் 2வது பிங் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பெரும் தோல்வியை தழுவியது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
India vs Australia 3rd Test

India vs Australia 3rd Test

இந்நிலையில் இந்தியா‍ ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நாளை தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை தக்க வைக்க இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். முதல் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் படுமோசமாக பேட்டிங் செய்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

காபா பிட்ச் வேகமும், பவுன்ஸ்சும் நிறைந்தது. ஆனாலும் பிட்ச் பவுலர்கள், பேட்ஸ்மேன்கள் என இருவருக்கும் சாதகமாக தயார் செய்யப்பட்டுள்ளதாக பிட்ச் வடிவமைப்பாளர் கூறியுள்ளார். ஆகையால் இந்திய வீரர்கள் ஒவ்வொரு நாளின் முதல் செஷனிலும் விக்கெட் இழக்காமல் கவனமுடன் பேட்டிங் செய்தால் அதிக ரன்கள் குவிக்கலாம். பவுலிங்கை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா மிகச்சிறப்பாக பந்துவீசி வருகிறார். முகமது சிராஜும் ஓரளவு நன்றாக பந்துவீசி வருகிறார். 

துணை முதல்வர் வைத்த கோரிக்கை! உடனே செஸ் சாம்பியன் குகேஷிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்த முதல்வர்!!

34
India vs Australia 3rd Test: what time?

India vs Australia 3rd Test: what time?

ஆனால் கடந்த டெஸ்ட் போட்டியில் 3வது பவுலரான ஹர்சித் ராணாவும், 4வது பவுலரான ரவிச்சந்திரன் அஸ்வினும் சரியாக பந்துவீசவில்லை. ஆகவே இந்த போட்டியில் இவர்கள் இருவருக்கு பதிலாக ஆகாஷ் தீப், ரவீந்திர ஜடேஜா அல்லது வாஷிங்டன் சுந்தர் களமிறங்க வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

44
India vs Australia 3rd Test: where to watch?

India vs Australia 3rd Test: where to watch?

காயம் காரணமாக கடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஜோஸ் ஹேசில்வுட் போலண்ட்டுக்கு பதிலாக மீண்டும் அணிக்கு திரும்புகிறார். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் இந்த போட்டியை நேரலையாக காணலாம். ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் தமிழ் வர்ணனையுடன் போட்டியை காணலாம். மேலும் மொபைலில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் போட்டியை கண்டு ரசிக்கலாம்.  

ஜெய்ஸ்வால் செயலால் கடுப்பான ரோகித் சர்மா; பேருந்தில் தனியாக சென்ற வீரர்கள்; என்ன நடந்தது?

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
IRE vs IND T20: இந்தியாவின் மோசமான தோல்விக்கு 5 பெரும் காரணங்கள்! இந்த' 2 வீரர்கள் படுமோசம்!
Recommended image2
Women's T20 World Cup: ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்து வெளியேறிய இந்தியா! ரசிகர்கள் ஷாக்!
Recommended image3
IND vs IRE 2nd T20: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்த அயர்லாந்து! டி20 தொடரை வென்று சரித்திர சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved