தனக்குத் தானே 'ஆப்பு' வைத்த சஞ்சு சாம்சன்; சாம்பியன்ஸ் டிராபியில் சேர்க்கப்படாததற்கு இதுதான் காரணமா?
இந்திய அணியின் இளம் வீரர் சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் சேர்க்கப்படாததற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.
Sanju Samson
மினி உலகக்கோப்பை
'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19ம் தேதி முதல் மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் செயல்பட உள்ளனர்.
விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர் சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம்பெறவில்லை.
Sanju Samson Batting
சஞ்சு சாம்சனுக்கு வந்த சோதனை
இதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இடம்பெறவில்லை. ஆனால் சஞ்சு சாம்சன் இங்கிலாந்து டி20 தொடரில் இடம்பெற்றிருந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எடுக்கப்படாதது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சனை அணியில் எடுக்காததற்கு பலரும் பிசிசிஐக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கெனவே ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் என்ற இரண்டு விக்கெட் கீப்பர்கள் அணியில் இருப்பதால் சஞ்சு சாம்சனை எடுக்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. இது ஒருபக்கம் இருந்தாலும் விஜய் ஹசாரே டிராபியில் சஞ்சு சாம்சன் விளையாடாத்தால் விரக்தி அடைந்த பிசிசிஐ அவரை அணியில் சேர்க்கவில்லை என்று தகவல்கள் பரவுகின்றன.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் படுதோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே டிராபி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
இந்திய அணியின் அடுத்த கேப்டன்? பாண்டியாவின் கனவுக்கோட்டையை தகர்த்த ரோகித், பிசிசிஐ
Champions Trophy 2025
இதுதான் காரணம்
ஆனால் இந்த உத்தரவை மதிக்காத சஞ்சு சாம்சன், கேரள கிரிக்கெட் சங்கம் வலியுறுத்தியும் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடாமல் துபாயில் சுற்றுலா சென்றுள்ளார். இதனால் கடுப்பான பிசிசிஐ, சஞ்சு சாம்சனை அணியில் எடுக்கவில்லை என கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன. விஜய் ஹசாரே டிராபிக்கு முன்னதாக நடந்த சையத் முஷ்டாக் அலி டிராபியில் சஞ்சு சாம்சன் கலந்து கொண்டார். இதனால் அவர் எந்த தடையுமின்றி டி20 அணியில் சேர்க்கப்பட்டார் என தகவல்கள் கூறுகின்றன.
விஜய் ஹசாரே டிராபியில் விளையாடாததற்கு சஞ்சு சாம்சனிடம் பிசிசிஐ விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில், சஞ்சு சாம்சனின் நடவடிக்கையை கேரள கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஜெயேஷ் ஜார்ஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர், ''சாம்சன் விஜய் ஹசாரே டிராபியில் ஏன் விளையாடவில்லை என்பது தெரியவில்லை.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே கேரள அணி வீரர்களுடன் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளுங்கள் என நாங்கள் தெரிவித்தோம். ஆனால் அவர் பயிற்சி முகாமுக்கு வர முடியாது என்று தெரிவித்தார்.
Champions Trophy Indian Team
கேரள கிரிக்கெட் சங்கம் விமர்சனம்
இதனால் நாங்கள் விஜய் ஹசாரே டிராபிக்கான கேரள அணியை தேர்வு செய்தோம். அணியை தேர்வு செய்த பிறகு நான் விளையாடுகிறேன் என்று சஞ்சு சாம்சன் தெரிவித்தார். சஞ்சு சாம்சன் அல்லது வேறு எந்த வீரராக இருந்தாலும் கேரள கிரிக்கெட் சங்கத்தின் கொள்கையை மதிக்க வேண்டும். சஞ்சு சாம்சனுக்கு பயிற்சி தேவையில்லை என்று எங்களுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் கேரள கிரிக்கெட் சங்கத்துக்கு இருக்கும் கொள்கையை அவர் மதித்திருக்க வேண்டும்.
ஆனால் நாங்கள் கூப்பிடும்போது வராமல், அவர் விரும்பும் போது மட்டும் வந்து அணியில் சேர்ந்து கொள்ள முடியுமா? கேரள அணிக்கு சிறப்பாக விளையாடியதன் அடிப்படையில் தானே சஞ்சு சாம்சன் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதை நினைவில் வைக்காமல், 'நான் விரும்பினால் மட்டுமே கேரள அணிக்காக விளையாடுவேன்' என்ற அவரின் நிலைப்பாடு ஏற்கத்தக்கத்து அல்ல. இதனால் தான் அவர் கேரள அணியில் சேர்க்கப்படவில்லை'' என்றார்.
கோ கோ உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பைனல் சென்ற இந்திய ஆண்கள் அணி