MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • அவுட் சைட் ஆப் ஸ்டெம்ப் பந்தில் அவுட்டு; ரிப்பீட்டு; எத்தனை முறை பட்டாலும் திருந்தாத விராட் கோலி!

அவுட் சைட் ஆப் ஸ்டெம்ப் பந்தில் அவுட்டு; ரிப்பீட்டு; எத்தனை முறை பட்டாலும் திருந்தாத விராட் கோலி!

ஆஸ்திரேலியா தொடரில் விராட் கோலி தொடர்ந்து படுமோசமாக பேட்டிங் செய்து வருகிறார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

2 Min read
Author : Rayar r
Published : Dec 16 2024, 12:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Virat Kohli Batting

Virat Kohli Batting

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.  இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடந்து வருகிறது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்தியாவின் பெயரை கேட்டாலே அடிப்பேன் என கூறி வரும் டிராவிஸ் ஹெட் இந்த முறைம் அதிரடி சதம் (160 பந்தில் 152 ரன்) எடுத்து அவுட் ஆனார்.மறுபக்கம் ஸ்டீபன் ஸ்மித்தும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சதம் (100 ரன்) விளாசியுள்ளார். இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
virat kohli bad form

virat kohli bad form

பின்பு முதல் இன்னிங்சை ஆடி வரும் இந்திய அணி 48 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. ஜெய்ஸ்வால் (4 ரன்), சுப்மன் கில் (1 ரன்) என ஸ்டார்க்கின் புயல் வேகப்பந்தில் அவுட் ஆனார்கள். இதேபோல் விராட் கோலி (3 ரன்) ஹேசில்வுட் வீசிய அவுட் சைட் ஆப் ஸ்டெம்ப் பந்தில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 9 ரன்னில் பேட் கம்மின்ஸ் பந்தில் காலியானார்.

வேகம் நிறைந்த ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இந்தியா வெற்றி பெற வேண்டுமானால் தான் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என விராட் கோலிக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் இந்த தொடர் முழுவதும் ரன் அடிக்க தடுமாறி வருகிறார் விராட் கோலி. முதல் டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் மட்டும் கோலி சதம் அடித்தார். அதுவும் கோலி களமிறங்கிய நேரம் பந்து மிகவும் பழசாகி பேட்டுக்கு ஏதுவாக வந்தது. இதனால் அவர் எளிதில் சதம் அடித்து விட்டார்.

குரங்கு இனத்துடன் பும்ராவை ஒப்பிட்டு பேசிய முன்னாள் வீராங்கனை; வறுத்தெடுக்கும் இந்திய ரசிகர்கள்!

34
India vs Australia Test Series

India vs Australia Test Series

ஆனால் இந்த தொடரில் நியூ பால் வீசும்போதும், பேட்டிங்கிக்கு கடினமாக இருக்கும் முதல் ஒரு மணி நேரத்திலும் விராட் கோலி சுத்தமாக ரன் அடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறியுள்ளார். அதுவும்  அவுட் சைட் ஆப் ஸ்டெம்ப்பில் பந்தை வீசினால் கோலி அவுட்டாகி விடுவார் என்பது கிரிக்கெட் பார்க்கும் சிறுவர்களுக்கே தெரியும்போது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தெரியாதா என்ன!

ஆஸ்திரேலியா பாஸ்ட் பவுலர்கள் மட்டுமில்ல; எந்த நாட்டு பவுலர்களாக இருந்தாலும் சரி கோலிக்கு எதிராக பயன்படுத்தும் ஒரே ஆயுதம் அவுட் சைட் ஆப் ஸ்டெம்ப்பில் பந்து. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக பேட்ஸ்மேனுக்கு தொந்தரவு கொடுக்காமல் ஸ்டெம்புக்கு வெளியே செல்லும் பந்தை தேவையில்லாமல் ஷாட் ஆட முயற்சித்து எளிதில் விக்கெட்டை தாரை வார்த்து விடுகிறார் விராட் கோலி. 

44
India vs Australia 3rd Test

India vs Australia 3rd Test

டெஸ்ட் கிரிக்கெடில் எக்கச்சக்க நேரம் உள்ளது. 150 பந்தில் அரை சதமும், 300 பந்தில் சதமும் அடித்தாலும் யாரும் ஒன்றும் சொல்லப்போவது இல்லை. வெளியே செல்லும் பந்துகளை விட்டு, ஸ்டெம்ப் நோக்கி வரும் பந்துகளை அடித்தாலே ரன்கள் எளிதாக வந்து விடும். ஆனால் கோலி கொஞ்சம் கூட பொறுமையின்றி தேவையில்லாமல் பந்தை அடிக்கச் சென்று விக்கெட்டை எதிரணிக்கு இலசமாக கொடுத்து விடுகிறார் என்று முன்னாள் வீரர்கள் பலர் குற்றம்சாட்டுகின்றனர்.

எத்தனை முறை பட்டாலும் திருந்தாத விராட் கோலி இனிமேலாவது திருந்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முதல் ஓவரிலேயே தடுமாறும் இந்தியா: 445 என்ற வலுவான நிலையில் ஆஸி. மேட்ச் யார் பக்கம்?
 

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விராட் கோலி

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026: CSK vs SRH: இம்பேக்ட் பிளேயராக தோனி? மேட்ச் வின்னர் கம்பேக்! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
Recommended image2
CSK: “சேப்பாக்கத்தில் இன்று உயிர்ப்போர்..! தோற்றால் CSK கனவு முடிவு – SRH காத்திருக்கும் அதிர்ச்சி!”
Recommended image3
Vaibhav Suryavanshi: ஒவ்வொரு அடியும் இடி மாதிரி.. சிக்சர் மழை பொழிந்து சாதனை படைத்த வைபவ்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved