இவங்ககிட்ட பந்து போனா மிஸ்ஸே ஆகாது! ஐபிஎல்லில் அசத்திய டாப் 5 ஃபீல்டர்கள்!
ஐபிஎல் 2025 தொடர் நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ள நிலையில், நடப்பு ஐபில்லில் அசத்திய டாப் 5 ஃபீல்டர்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

Top 5 Best fielders IPL 2025
இந்தியா பாகிஸ்தான் மோதலால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 தொடர் நாளை மீண்டும் தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் தொடர் ஃபீல்டர்களுக்கு மிகவும் சோதனையாக அமைந்துள்ளது. நம்பகமான ஃபீல்டர்கள் கூட முக்கியமான தருணங்களில் கேட்ச்களைத் தவறவிட்டதையும், மிஸ் ஃபீல்ட் செய்ததையும் பார்க்க முடிந்தது. ஐபிஎல் 2025ன் முதல் 39 போட்டிகளில் 431ல் 103 கேட்ச்கள் தவறவிடப்பட்டுள்ளன. அதாவது நான்கில் ஒரு கேட்ச் தவறவிடப்படுகிறது. இது 2020 ஐபிஎல் சீசனுக்குப் பிறகு மோசமான செயல்திறனாகும்.
Top 5 Fielders Masses in IPL
ஆனாலும் நடப்பு ஐபிஎல் தொடரில் கமிண்டு மெண்டிஸ், சாம் கரன், பில் சால்ட் போன்றோர் அற்புதமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் ஒட்டுமொத்த கேட்சிங் தரம் சரிந்துள்ளது. உதாரணமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏப்ரல் மாதம் வரை 88% கேட்சிங் திறனுடன் இருந்தது. ஆனால் இப்போது அது 79%க்கும் கீழே குறைந்துள்ளது. இந்நிலையில், ஐபிஎல் 2025ல் அதிக கேட்ச்களை பிடித்த 5 வீரர்களை பார்ப்போம்.
Ncholas Pooran
1.நமன் தீர் (மும்பை இந்தியன்ஸ்)
மும்பை இந்தியன்ஸ் வீரர் நமன் தீர் 11 போட்டிகளில் 11 கேட்ச்கள் பிடித்துள்ளார். போட்டிக்கு 1.00 கேட்ச் என்ற சராசரியுடன் ஐபிஎல் 2025ல் முதலிடத்தில் உள்ளார்.
2. ஷிம்ரன் ஹெட்மயர் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
ராஜஸ்தான் ராயல்ஸ் ஷிம்ரன் ஹெட்மயர் ரூ.11 கோடிக்குத் தக்கவைத்தது. பேட்டிங்கில் சொதப்பினாலும் 12 போட்டிகளில் 10 கேட்ச்கள் பிடித்து அசத்தியுள்ளார். போட்டிக்கு 0.83 கேட்ச் என்ற சராசரியுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.
3. நிக்கோலஸ் பூரன் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்)
நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் 2025ல் அசத்தலான தொடக்கம் கொடுத்தார். தொடக்கத்தில் ரன்கள் அடித்த அவர் பின்பு சொதப்பினார். ஆனால் பீல்டிங்கில் சிறந்து விளங்கிய அவர் 11 போட்டிகளில் 8 கேட்ச்கள் பிடித்துள்ளார்.
Yashasvi Jaiswal
4. திலக் வர்மா (மும்பை இந்தியன்ஸ்)
திலக் வர்மா 3வது இடத்தில் பேட்டிங்கில் திறமையை நிரூபித்தார். ஆனால் மும்பை அவரை 5வது இடத்தில் களமிறக்கியது. பேட்டிங் பாதிக்கப்பட்டாலும் 11 போட்டிகளில் 8 கேட்ச்கள் பிடித்துள்ளார்.
5. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் காயத்தால் விலகியதால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன்கள் குவிக்கும் பொறுப்பை ஏற்றார். பேட்டிங்கில் மட்டுமின்றி பீல்டிங்கிலும் அசத்தும் ஜெய்ஸ்வால் 12 போட்டிகளில் 8 கேட்ச்கள் பிடித்து அசத்தியுள்ளார்.