அஸ்வினின் இடத்தை பிடித்த இளம் வீரர்; அக்சர் படேலை ஓவர்டேக் செய்தது எப்படி; யார் இந்த தனுஷ் கோட்யான்?
இந்திய அணியில் அஸ்வினுக்கு பதிலாக தனுஷ் கோட்யான் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Tanush Kotian
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்து விட்டன. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. அதே வேளையில் அடிலெய்டில் 2வது பிங் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், அவருக்கு பதிலாக இளம் வீரர் தனுஷ் கோட்யான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Tanush Kotian Bowling
அஸ்வினின் இடத்தில் யுஸ்வேந்திர சாஹல் அல்லது அக்சர் படேல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும்விதமாக தனுஷ் கோட்யான் இடம்பிடித்துள்ளார். 26 வயதான தனுஷ் கோட்யான் ரஞ்சி டிராபி மற்றும் துலீப் டிராபியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2023-24 ரஞ்சி டிராபியில் அவர் மும்பை அணியில் விளையாடிய நிலையில், தொடர் நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு: தொடரில் இருந்து விலகினார் ஷமி
Indian Team
மேலும் நவம்பரில் நடந்த ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தியதுடன் 44 ரன்களும் எடுத்தார். வலது கை ஸ்பின் பவுலிங் போடுவதுடன், பேட்டிங்கிலும் கலக்குவதால் தனுஷ் கோட்யானுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. முதல்தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியுள்ள இவர் 33 போட்டிகளில் 25.70 சராசரியில் 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் 41.21 என்ற சராசரி வைத்துள்ளார்.
இதனால்தான் அக்சர் படேல் இருந்தும் பிசிசிஐ இவரை அணியில் சேர்த்துள்ளது. ஏற்கெனவே இந்திய அணியில் அஸ்வின் இடத்தை வாஷிங்டன் சுந்தர் பிடித்து விட்டார். ஜடேஜாவும் அணியில் இருக்கிறார். இவர்கள் இருவரும் காயம் அல்லது வேறு காரணங்களால் விளையாடமுடியாதபட்சத்தில் தனுஷ் கோட்யானுக்கு பிளேயிங் வெலனில் இடம்கிடைக்கும்.
India vs Australia Test
கடைசி 2 போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், சர்ப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், தேவ்தத் படிக்கல், தனுஷ் கோட்யான்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ளி மருத்துவமனையில் அனுமதி