டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் 2 சாதனைகளை தகர்த்தெறிந்த சுப்மன் கில்!
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் 2 சாதனைகளை சுப்மன் கில் முறியடித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Shubman Gill breaks Virat Kohli's records: ஐபிஎல்லில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 198 ரன்கள் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் 55 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 90 ரன்கள் அடித்தார். பின்பு விளையாடிய கொல்கத்தா அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிரடி அரைசதம் விளாசிய சுப்மன் கில் ஆட்டநாயகன் விருது வென்றார்.
Shubman Gill, GT
சுப்மன் கில் புதிய சாதனை
இந்த போட்டியின் மூலம் சுப்மன் கில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 3,500 ரன்களை நிறைவு செய்தார். இதன்மூலம் 25 வயதில் 3,500 ரன்களை நிறைவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 26 வயதை அடைவதற்கு முன்பு எந்த வீரரும் 3,000 ரன்கள் கூட எடுக்கவில்லை. ரிஷப் பண்ட் தனது 25 வயதில் 98 போட்டிகளில் 2,838 ரன்கள் அடித்திருந்தார். விராட் கோலி தனது 25 வயதில் 107 போட்டிகளில் 2,632 ரன்கள் எடுத்திருந்தார்.
விராட் கோலி சாதனை முறியடிப்பு
மேலும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற சுப்மன் கில் 25 வயதில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். சுப்மன் கில் அனைத்து டி20 போட்டிகளிலும் சேர்த்து 12 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார். விராட் கோலி முன்னதாக 25 வயதில் டி20 போட்டிகளில் 11 ஆட்ட நாயகன் விருதுகளுடன் இந்த சாதனையைப் படைத்திருந்தார். இதன்மூலம் கோலி சாதனையை கில் முறியடித்து இருக்கிறார்.
அதிரடியாக விளையாடி கேகேஆருக்கு தண்ணி காட்டிய சாய் சுதர்சன், சுப்மன் கில் – 198 ரன்கள் குவித்த GT!
Shubman Gill Record
சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா
இந்த பட்டியலில் சுரேஷ் ரெய்னா தனது 25 வயதில் 129 போட்டிகளில் 10 ஆட்டநாயகன் விருது வென்று 3வது இடத்தில் வீற்றிருக்கிறார். அபிஷேக் சர்மா தனது 25 வயதில் 139 போட்டிகளில் 9 ஆட்டநாயகன் விருது வென்று 4வது இடத்திலும், ரோகித் சர்மா தனது 25 வயதில் 149 போட்டிகளில் 9 ஆட்டநாயகன் விருது வென்று 5வது இடத்திலும் உள்ளனர்.
மேலும் நேற்றைய போட்டியின் மூலம் சுப்மன் கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 58 போட்டிகளில் 1417 ரன்கள் எடுத்தார். அவர் கே.கே.ஆர் அணியுடன் 2018 இல் தனது ஐபிஎல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2022 இல் குஜராத் டைட்டன்ஸ் அணியில் சேர்ந்தார். மேலும் குஜராத் அணிக்காக சுப்மன் கில் 2104 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Gujarat Titans, Cricket
சிறந்த ஆட்டத்தை விளையாட விருப்பம்
கே.கே.ஆர் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு பேசிய சுப்மன் கில், ''வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இரண்டு போட்டிகளும் எங்கள் நிலையை தீர்மானிக்கப் போகின்றன என்பது எங்களுக்கு முன்பே பேசப்பட்டது. எனவே அவை நடந்த விதத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நானும் சாய் சுதர்சனும் சிறந்த ஆட்டத்தை விளையாட விரும்புகிறோம், அதிக ரன்கள் எடுக்க விரும்புகிறோம். எங்களில் ஒருவர் இறுதியில் இருக்க வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை. நாங்கள் ஆழமாக பேட்டிங் செய்ய விரும்புகிறோம்'' என்றார்.
சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு? ஆர்சிபி போட்டியிலும் விலகல்! திட்டமிட்டு ஓரங்கட்டப்படுகிறாரா?