இந்தியன் டீம்ல திருப்பி எடுக்கல அதையே நெனச்சு கவலைப்படல MI கப் ஜெயிக்க வைப்பேன் ரோஹித் இது சத்தியம் : சூர்யா
இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்ட நேரத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இடையே நடைபெற்ற உரையாடல் குறித்து தெரியவந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியிலும் சிறப்பாக ஆடி வருகிறார். அதற்கு உதாரணமாக, அவர் 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி, தொடரின் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 480 ரன்களுடன் 7-ம் இடத்தை பிடித்தார். ரன்கள் எடுத்ததை காட்டிலும் அவரால் மும்பை அணி சில போட்டிகளில் தோல்வியை வெற்றியாக மாற்றி இருந்தது.
நிச்சயம் பிசிசிஐ இந்திய அணிக்கு தேர்வு செய்யும் என விமர்சகர்கள் முதல் ரசிகர்கள் வரை எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்த்தப்படி ஆஸ்திரேலிய தொடரில் இடம் கிடைக்கவில்லை.
ஒரு பேட்டியில் பேசிய சூர்யகுமார் யாதவ், ‘ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது தான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.அணித் தேர்வு பற்றி அறிந்த போது தன்னால் உடற்பயிற்சிகளை கூட செய்ய முடியாமல் ஏமாற்றத்தில் தவித்ததாக கூறினார். இந்திய அணியில் எந்த இடத்திலாவது தனக்கு வாய்ப்பு கிடைக்குமா என தான் எண்ணி வருந்தியதாகவும், அன்றைய இரவு உணவு கூட உண்ணாமல், யாரிடமும் பேசாமல், தனிமையில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்
சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்படாத நேரத்தில், என்ன நடந்தது என்பது குறித்து, ரோகித் சர்மா கூறியுள்ளார்.நாங்கள் எங்கள் அணி (மும்பை இந்தியன்ஸ்) அறையில் உட்கார்ந்திருந்தோம். இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் செய்யப்படாததால், அவர் மனச்சோர்வடைந்ததை என்னால் உணர முடிந்தது. ஆனால் நான் அவரிடம் சென்று பேசவில்லை. பின்னர் அவரே வந்து, ‘கவலைப்பட வேண்டாம், நான் எல்லாவற்றையும் மீறி மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெறுவேன்’ என சூர்யகுமார் யாதவ் கூறினார்
இதைக் கேட்டதும், ஐபிஎல் அடிப்படையில் மட்டுமல்லாமல், அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் அவர் சரியான திசையில் செல்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். இந்தியாவில் நிறைய உள்ளூர் போட்டிகள் நிறைய உள்ளன. அவருடைய நேரம் வரும். அப்போது அவர் சாதிப்பார். இந்த தத்துவம் தான் எனக்கும் நடந்திருக்கிறது'’ என்று ரோகித் தெரிவித்தார்