MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • முகமது சிராஜை இந்திய அணியில் எடுக்காதது ஏன்? வெளிப்படையாக பேசிய ரோகித் சர்மா!

முகமது சிராஜை இந்திய அணியில் எடுக்காதது ஏன்? வெளிப்படையாக பேசிய ரோகித் சர்மா!

முகமது சிராஜை சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் எடுக்காதது குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். 

2 Min read
Author : Rayar r
Published : Jan 18 2025, 07:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Mohammed Siraj and Rohit sharma

Mohammed Siraj and Rohit sharma

'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19ம் தேதி முதல் மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மாவும், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரும் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தனர்.

இந்திய அணியில் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் செயல்பட உள்ளனர். இவர்கள் தவிர விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Mohammed Siraj Bowling

Mohammed Siraj Bowling

சமீபகாலமாக சரிவர விளையாடாத சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கபப்ட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. மேலும் ஆஸ்திரேலிய தொடரில் ஓரளவு சிறப்பாக விளையாடிய முகமது சிராஜும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி அறிவிப்பு; 'இளம்' வீரர் நீக்கம்; பும்ரா இருக்கிறாரா? முழு லிஸ்ட் இதோ!
 

34
Champions Trophy 2025

Champions Trophy 2025

இந்நிலையில், இந்திய அணியை அறிவித்த பிறகு கேப்டன் ரோகித் சர்மாவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது சிராஜை அணியில் எடுக்காதது குறித்தும் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா, ''முகமது சிராஜ் அணியில் இடம்பெறாதது துரதிர்ஷ்டவசமானது. புதிய பந்தில் சிராஜ் சிறப்பாக செயல்படுகிறார்.

ஆனால் பந்து பழையதாகும்போது சிராஜின் செயல்திறன் குறைகிறது. பழைய பந்தில் அவர் சரியாக செயல்படவில்லை. இதனால் புதிய பந்தில் பந்து வீசக்கூடிய மற்றும் நடுப்பகுதியில், டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசக்கூடிய பவுலர்களை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது'' என்றார்.

44
India vs Pakistan Match

India vs Pakistan Match

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. 

பிப்ரவரி 19ம் தேதி முதல் போட்டியில் நியூசிலாந்தும், பாகிஸ்தானும் மோதுகின்றன. உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பீரின் கோரிக்கை ஏற்பு: இந்திய அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர்

 

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ரோகித் சர்மா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஜினியின் வெறித்தனமான ரசிகர்! விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்! வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன தெரியுமா?
Recommended image2
IPL 2026 Points Table: 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டி! டாப் கியரில் ஆர்சிபி.. தத்தளிக்கும் சிஎஸ்கே!
Recommended image3
IPL 2026: CSK vs SRH: இம்பேக்ட் பிளேயராக தோனி? மேட்ச் வின்னர் கம்பேக்! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved