- Home
- Sports
- ஐபிஎல் ஏலத்தில் தவறிழைத்த ஆர்சிபி; 3 போட்டியில் 9 ரன் கூட தாண்டாத அதிரடி வீரர்; 11 கோடி போச்சா!
ஐபிஎல் ஏலத்தில் தவறிழைத்த ஆர்சிபி; 3 போட்டியில் 9 ரன் கூட தாண்டாத அதிரடி வீரர்; 11 கோடி போச்சா!
ஆர்சிபி ஏலத்தில் எடுத்த இங்கிலாந்து அதிரடி வீரர் இந்திய டி20 தொடரில் ரன் அடிக்கத் தடுமாறி வருகிறார். 3 போட்டிகளில் மொத்தம் 9 ரன்களை கூட அவரால் தாண்ட முடியவில்லை.

ஐபிஎல் ஏலத்தில் தவறிழைத்த ஆர்சிபி; 3 போட்டியில் 9 ரன் கூட தாண்டாத அதிரடி வீரர்; 11 கோடி போச்சா!
இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 21ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் ஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 2025 ஐபிஎல் தொடரில் ஏராளமான அணிகள் இப்போதே தயாராகி வருகின்றன. ஒப்பனிங் யார் விளையாட வேண்டும்? மிடில் வரிசையில் யார் விளையாட வேண்டும்? என்பது குறித்த பட்டியலை தயார் செய்து வருகின்றன.
2025 ஐபிஎல் தொடர்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அணிகளில் மிக முக்கியமனாது ஆர்சிபி எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஆரம்பத்தில் இருந்தே ஐபிஎல் தொடர்களில் விளையாடி வரும் ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. நீண்ட காலமாக விராட் கோலி கேப்டனாக இருந்தும் ஆர்சிபியால் கோப்பையை தட்டித்தூக்க முடியவில்லை. கடந்த சீசனில் டூ பிளிசிஸ் தலைமையிலும் ஆர்சிபி படுதோல்வியை தழுவியது.
பில் சால்ட்
2025 ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஆர்சிபி இன்னும் கேப்டனை அறிவிக்கவில்லை. இந்நிலையில், ஆர்சிபி அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து அதிரடி வீரர் பில் சால்ட் தொடர்ந்து சொதப்பி வருவது அந்த அணி நிர்வாகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா இங்கிலாந்து இடையிலான டி20 தொடர் நடந்து வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் பில் சால்ட் 3 போட்டிகளில் விளையாடி 9 ரன்களை கூட தாண்டவில்லை.
அதாவது முதல் போட்டியில் டக் அவுட் ஆன அவர், 2வது போட்டியில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 3வது போட்டியிலும் 5 ரன்களில் வெளியேறினார். அதுவும் 3 போட்டிகளிலும் இவர் பாஸ்ட் பவுலிங்கில் ஆட்டமிழந்து தான் இதில் வேதனையான விஷயம். மூன்று போட்டிகளிலும் பில் சால்ட் மூன்று ஓவர்கள் கூட களத்தில் நிற்கவில்லை. அதிரடிக்கு பெயர்போன பில் சால்ட்டை ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி ரூ.11.50 கோடிக்கு வாங்கியது.
சிங்கம் களம் இறங்கிடுச்சே! மீண்டும் ரஞ்சி போட்டியில் களம் இறங்கிய கிங் கோலி - அதிர்ந்த ஸ்டேடியம்
ஆர்சிபி அணி
ஆர்சிபி அணியில் தொடக்கத்தில் அதிரடி வீரர் இல்லாத நிலையிலும், ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை மனதில் வைத்தும் பில் சால்ட்டை ஆர்சிபி அணியில் எடுத்தது. இது மட்டுமின்றி கடந்த சீசனில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியில் ஆடிய பில் சால்ட் 12 போட்டிகளில் 435 ரன்கள் குவித்து கொல்கத்தா கோப்பையை கையில் ஏந்த முக்கிய பங்கு வகித்தார். இதை மனதில் வைத்தும் பல கோடிகளை கொட்டி ஆர்சிபி அவரை அணியில் எடுத்தது.
ஏலத்தில்தவறு செய்த ஆர்சிபி
ஆனால் இப்போது இந்திய தொடரில் அவர் கொஞ்சம் கூட ரன் அடிக்க முடியாமல் திணறி வருவது ஆர்சிபி அணி நிர்வாகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க வீரர்களை பொறுத்தவரை இந்திய மண்ணில் ஸ்பின் பந்தில் தடுமாறினாலும், பாஸ்ட் பவுலிங்கில் சூப்பராக விளையாடுவார்கள்.
ஆனால் பில் சால்ட் இந்திய தொடரில் பாஸ்ட் பவுலிங்கில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வருவது ஆர்சிபி அணி நிர்வாகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பில் சால்ட்டை ஏலத்தில் எடுத்து ஆர்சிபி தவறு செய்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
IND vs ENG 4th T20: இந்திய அணியில் 2 வீரர்கள் அதிரடி நீக்கம்? பிளேயிங் லெவன் இதுதான்!