டிராவிஸ் ஹெட்டை வைத்து ஆர்சிபியை அவமானப்படுத்திய Uber! நீதிமன்றத்தில் RCB வழக்கு!
டிராவிஸ் ஹெட்டை விளம்பரத்தில் நடிக்க வைத்து தங்கள் பிராண்டை உபர் நிறுவனம் அவமானப்படுத்திவிட்டதாக ஆர்சிபி அணி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

RCB Sues Uber Over Ad Featuring Travis Head: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. தினமும் விறுவிறுப்பான போட்டிகள் நடந்து வருகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்று ஆர்சிபி. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி 6 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி பெற்று 2ல் தோல்வி அடைந்து 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இதுவரை கோப்பையை கையில் ஏந்தாத ஆர்சிபி இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Travis Head, RCB, SRH
இதுவரை நடைபெற்ற 17 ஐபிஎல் சீசன்களில் ஆர்சிபி ஒருமுறை கூட கோப்பையை கூட வெல்லவிட்டாலும் ஆர்சிபி பிராண்ட் சிறிதும் மங்கவில்லை. அந்த அணிக்கு ஆண்டுக்கு ஆண்டு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். தொடர்ந்து தோல்வி அடைந்தாலும் ஆர்சிபியை ரசிகரக்ள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட்டை வைத்து ஒரு விளம்பரத்தில் ஆர்சிபியை உபர் நிறுவனம் அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபத் போட்டிக்கு முன்பாக டிராவிஸ் ஹெட்டை வைத்து ஒரு விளம்பரத்தை எடுத்துள்ளது உபர் நிறுவனம். Ride like a Hyderabaddie என்ற தலைப்பை கொண்ட அந்த விளம்பரத்தில் Uber Motoஎன்ற பெயர் பொறித்த ஹெல்மெட் அணிந்து உபர் பைக்கில் பின்னால் உட்கார்ந்திருக்கும் டிராவிஸ் ஹெட் வெள்ளை சட்டை அணிந்து, தடிமனான தங்கச் சங்கிலிகளை கழுத்தில் அணிந்தபடி பைக்கில் வலம் வருகிறார்.
IPL 2025: இந்த சீசனின் முதல் சூப்பர் ஓவர் – த்ரில் வெற்றி பெற்ற டெல்லி கேபிடல்ஸ்!
Travis Head, Uber Ad
தொடர்ந்து சாலைகளில் செல்வபவர்களை பார்த்து கையசைக்கும் டிராவிஸ் ஹெட், ஆர்சிபிக்கு தான் தலைவலியாக இருப்பேன் என்பதுபோல் சைகை செய்கிறார். இந்த விளம்பரத்தில் 'ராயல் சேலஞ்ச்ட் பெங்களூர்' என்ற வாசகம் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், 'ராயல் சேலஞ்ச்ட் பெங்களூர்' என்று கூறி ஆர்சிபி பிராண்டை கேலி செய்வதாகக் கூறி, அந்த விளம்பரத்தை உடனடியாக நீக்கக் கோரி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டிராவிஸ் ஹெட் இடம்பெறும் விளம்பரத்தில் ஆர்சிபியின் பிராண்ட் இமேஜை உபர் சேதப்படுத்தியதாக பெங்களூரு அணி நிர்வாகம் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. இதைச் செய்வதன் மூலம், அவர்களின் வர்த்தக முத்திரையை நீர்த்துப்போகச் செய்வதை நேரடியாகத் தாக்குவதாக அது கூறியது. ஆர்சிபி அணியை கேலி செய்யும் ஒரே நோக்கத்துடன் இந்த விளம்பரம் படமாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. 'இது இந்த சீசனின் கோப்பை' என்ற அவர்களின் வாசகத்தையும் அந்த விளம்பரம் கேலி செய்வதாக உரிமையாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
IPL 2025, Cricket
ஆர்சிபி அணிக்கும் ரசிகர்களுக்கும் இடையே ஒரு உணர்ச்சிபூர்வமான பிணைப்பு உள்ளது. விளம்பரத்தில் அதை கிண்டலாகக் காண்பிப்பது ரசிகர்கள் மற்றும் குழு உறுப்பினர்களின் உணர்ச்சிகளுடன் விளையாடுவதாகும் என்றும் ஆர்சிபி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ''விளம்பரங்களைச் செய்வதற்கு உங்களிடம் மில்லியன் கணக்கான ஆக்கப்பூர்வமான வழிகள் இருந்தன. என்னுடைய வர்த்தக முத்திரையைப் பயன்படுத்தி நீங்கள் அதைச் செய்ய வேண்டுமா?'' என்று ஆர்சிபி கூறியுள்ளது.
இந்த வழக்கை "அபத்தமானது" என்று அழைத்த உபர், விளம்பரத்தில், டிராவிஸ் ஹெட் ஆர்சிபியை "கெட்டவர்கள்" என்று அழைக்கவில்லை, ஆனால் அவர்களின் போட்டியின் போது அணிக்கு தலைவலியை ஏற்படுத்துவார் என்று மட்டுமே பரிந்துரைத்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்துக்கு தடை உத்தரவு கோரிய ஆர்சிபியின் மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சொதப்பல் மன்னனான மேக்ஸ்வெல் – PBKS நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுக்க என்ன காரணம்?
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.