2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு! 6 அணிகள் மட்டுமே விளையாட முடியும்! முழு விவரம்!
2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 6 அணிகள் பங்கேற்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2028 Olympics: 6 teams in the cricket tournament: உலகில் கால்பந்துக்கு அடுத்தபடியாக அதிகம் செலுத்துவது கிரிக்கெட் தான். சில நாடுகளே விளையாடினாலும் உலகம் முழுவதையும் கிரிக்கெட் தன்வசப்படுத்தியுள்ளது. அதிலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற ஆசிய நாடுகளில் கிரிக்கெட் என்பது ஒரு மதம் போன்றதாகும். கிரிக்கெட் தொடர்ந்து பிரபலமாகி வரும் நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
Olympics 2028: Cricket competition
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இதற்கான முயற்சியை தொடர்ந்து எடுத்து வந்தது. வரும் 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டையும் சேர்க்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC)அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆனால் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் மட்டுமே பங்கேற்க முடியும் என்று ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். அதாவது ஆண்கள் பிரிவில் 6 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் என ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் என மொத்தம் 90 கிரிக்கெட் வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை நீக்கிய விராட் கோலி! கடைசியில் வந்த 'ஸ்வீட்' ட்விஸ்ட்!
Cricket, Olympics
ஐசிசியில் இப்போது இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து என 12 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. 94 நாடுகள் அசோசியேட் உறுப்பினர்களாக உள்ளன. இதனால் ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்னதாக தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு அந்த 6 அணிகள் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
Indian Team, ICC
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 2028 ஒலிம்பிக்கை நடத்தும் அமெரிக்கா அணி தானாகவே தகுதி பெற்று விடும். ஆகவே மீதமுள்ள 5 அணிகள் மட்டுமே தகுதிசுற்று மூலம் உள்ளே நுழைய முடியும். ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி டி20 வடிவத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவது இது முதன்முறை அல்ல. கடைசியாக 1900-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்றது. இப்போது சுமார் 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் பங்கேற்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது.
CSK vs KKR: உங்க சேவை போதும்! முக்கிய ஃபாஸ்ட் பவுலரை நீக்கிய சிஎஸ்கே! பிளேயிங் லெவன்!