MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • ஷாருக்கானின் முதல் சாய்ஸ் KKR இல்லை; ரூ.1,723 கோடி மதிப்புடைய இந்த அணிதான்; எந்த டீம்?

ஷாருக்கானின் முதல் சாய்ஸ் KKR இல்லை; ரூ.1,723 கோடி மதிப்புடைய இந்த அணிதான்; எந்த டீம்?

ஐபிஎல்லில் ஷாருக்கான் முதலில் வாங்க நினைத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இல்லை என்று லலித் மோடி கூறியுள்ளார். 

2 Min read
Rayar r
Published : Dec 12 2024, 01:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
IPL season 2025

IPL season 2025

இந்தியாவில் மிகப்பெரிய பணக்கார விளையாட்டாக ஐபிஎல் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் சீசனின்போது பலநூறு கோடி அளவில் பணம் புழங்குகிறது. அண்மையில் சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் இரண்டு நாட்களில் மட்டும் ரூ.639.15 கோடிக்கு  182 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். 

தங்களின் ஐபிஎல் அணிகள் மீது பல கோடிகளில் பணத்தை கொட்டும் உரிமையாளர்கள் கொட்டும் பணத்தை விட பன்மடங்கு சம்பாதித்து விடுகின்றனர். இதேபோல் ஐஎல்லில் விளையாடும் வீரர்களும் நல்ல காசு பார்க்கின்றனர்.
 

24
KKR Champion 2024 IPL

KKR Champion 2024 IPL

ஐபிஎல் அணிகளின் முக்கியமான ஒரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) இந்த அணியின் உரிமையாளர்களாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். நடிகை ஜூஹி சாவ்லா மற்றும் அவரது கணவர் ஜெய் மெஹ்தா ஆகியோர் உள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 

2014ம் ஆண்டு சிஎஸ்கேவை தோற்கடித்தும், 2024ம் ஆண்டு  கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை தோற்கடித்தும், கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தோற்கடித்தும் கோப்பையை தட்டித்தூக்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ. இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளரான ஷாரூக்கான் முதலில் கொல்கத்தாவுக்கு பதில் மும்பை அணியை தான் வாங்க விருப்பம் தெரிவித்தார் என்று ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி கூறியுள்ளார். 

காபா பிட்ச் எப்படி? இந்தியர்களின் வயிற்றில் பாலை வார்த்த பிட்ச் தயாரிப்பாளர்! முழு விவரம்!

34
Shah Rukh Khan , KKR

Shah Rukh Khan , KKR

இது தொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த லலித் மோடி, ''ஷாருக்கான் முதன்முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை தான் வாங்க திட்டமிட்டார். ஆனால் மும்பை அணியை முகேஷ் அம்பானி தேர்வு செய்ததால், ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தேர்வு செய்தார். ஷாருக்கான் ஐபிஎல் வளர பெரும் காரணமாக இருந்தார்.

அவர் கிரிக்கெட்டை அனைவரும் விரும்பும் பொழுதுபோக்காக மாற்ற்றினார். பெண்கள் மற்றும் குழந்தைகளை ஸ்டேடியங்களுக்குள் கொண்டு வந்தார். இது ஐபிஎல் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. முதலில் ஐபிஎல் தொடக்க சீசனைக் காண பிரபலங்கள் வரவில்லை. ஆனால் ஷாருக்கானை பார்த்தபின்பு தீபிகா படுகோன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வந்தனர். ஐபிஎல்லை அனைவரிடமும் கொண்டு சேர்த்தது ஷாருக்கான் தான்'' என்று தெரிவித்தார்.

44
IPL Auction 2024

IPL Auction 2024

கடந்த 2007ம் ஆண்டு ஷாருக்கான், ஜூஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ரூ.570 கோடிக்கு வாங்கினார்கள். ஷாருக்கான் வாங்க நினைத்த மும்பை இந்தியன்ஸ் அணியின் இப்போதைய மதிப்பு ரூ.1,723 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.Do you know which IPL team Shahrukh Khan first wanted to buy?

வெறும் 22 வயதில் ஓய்வு பெற்ற உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்: தோனி, கோலியை விட டாப்பு

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
விளையாட்டு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved