MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • காபா பிட்ச் எப்படி? இந்தியர்களின் வயிற்றில் பாலை வார்த்த பிட்ச் தயாரிப்பாளர்! முழு விவரம்!

காபா பிட்ச் எப்படி? இந்தியர்களின் வயிற்றில் பாலை வார்த்த பிட்ச் தயாரிப்பாளர்! முழு விவரம்!

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் நடக்கும் காபா பிட்ச் எப்படி? இருக்கும் என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar r
Published : Dec 12 2024, 09:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
How about Gabba pitch?

How about Gabba pitch?

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிந்து விட்ட நிலையில், பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது.  அதே வேளையில் 2வது பிங் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. 

அணிக்கு தூணாக இருக்க வேண்டிய முன்னணி வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் படுமோசமாக பேட்டிங் செய்ததே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும். மேலும் பும்ரா, சிராஜை தவிர 3வது பவுலரான ஹர்சித் ராணாவும், 4வது பவுலரான ரவிச்சந்திரன் அஸ்வினும் சரியாக பந்துவீசாததும் தோல்விக்கு ஒரு காரணமாகும்.

24
Ind vs Aus test series

Ind vs Aus test series

இந்தியா‍ ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முன்னிலை பெறவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை தக்க வைக்கவும் இந்தியா இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக விளங்கும் காபா பிட்ச் வேகம் மற்றும் பவுன்ஸ் நிறைந்ததாகும்.

5 நாட்களிலும் முதல் 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை பேட்ஸ்மேன்கள் தேவையில்லாமல் பேட்டை வெளியே நீட்டாமல் பொறுமை காத்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்நிலையில், 3வது டெஸ்ட் போட்டிக்கு காபா பிட்ச் எப்படி தயார் செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து பிட்ச் தயாரிப்பாளர் டேவிட் சந்துர்ஸ்கி கூறுகையில், ''காபா பிட்ச் வேகம் மற்றும் பவுன்ஸ்சுக்கு பெயர் போனது. அதேபோலத்தான் இந்த முறையும் தயார் செய்யப்பட்டுள்ளது.

வெறும் 22 வயதில் ஓய்வு பெற்ற உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்: தோனி, கோலியை விட டாப்பு

34
Gabba Pitch Report

Gabba Pitch Report

அதே வேளையில் பவுலர்களுக்கு மட்டும் சாதகமாக இருக்கும் வகையில் கூடுதலாக ஏதும் செய்யவில்லை. பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் இருவருக்குமே பலனளிக்கும் வ‌கையில் பிட்ச் இருக்கும். ஒவ்வொரு நாளின் தொடக்கத்தின்போதும் பசுமையாக இருக்கும் பிட்ச்கள் பவுலர்களுக்கு கைகொடுக்கும். பின்பு போகப்போக பிட்ச் தேய்ந்து பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறும்''என்றார்.
 

44
Team India

Team India

நான் ஏற்கெனவே குறிப்பிட்டப்படி 'பொறுத்தார் பூமி ஆழ்வார்' என்பதற்கேற்ப இந்திய பேட்ஸ்மேன்கள் தேவையில்லாத ஷாட்கள் ஆடாமல், உள்ளே வரும் பந்துகளை மட்டும் எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தால் பெரிய ஸ்கோரை செட் செய்யலாம். காபா பிட்ச் நன்றாக பவுன்ஸ் ஆகும் என்பதால் இந்திய பவுலர்கள் அதிகமான பவுன்ஸ்களை வீச வேண்டியது அவசியமாகும். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய பவுலர்கள் அதிக பவுன்சர்கள் வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக்கோப்பை வெற்றி முதல் ஐபிஎல் ஏலம் வரை; இந்திய கிரிக்கெட் 2024 ஒரு ரீகேப்

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
Latest Videos
Recommended Stories
Recommended image1
கிரிக்கெட்டில் அடுத்த லெவலுக்கு செல்லும் வைபவ் சூர்யவன்ஷி... இனி டி20-ல் அபிஷேக் ஷர்மாவுக்கு பதில் இவரா?
Recommended image2
ஹர்திக்கின் ஹார்ட்-வின்னிங் மொமண்ட்..! வான்கடே ஊழியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ் கொடுத்த பாண்டியா..!
Recommended image3
IPL 2026: இரண்டாம் கட்ட அட்டவணை வெளியீடு..! மீண்டும் களைகட்டும் கிரிக்கெட் திருவிழா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved