MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • ஐபிஎல் 2025 தொடங்கும் தேதியில் மாற்றமா? 'இம்பாக்ட் பிளேயர்' விதி நீக்கமா? முக்கிய அப்டேட்!

ஐபிஎல் 2025 தொடங்கும் தேதியில் மாற்றமா? 'இம்பாக்ட் பிளேயர்' விதி நீக்கமா? முக்கிய அப்டேட்!

ஐபிஎல் போட்டிகளில் கடைபிடிக்கப்படும் 'இம்பாக்ட் பிளேயர்' விதியை நீக்க வேண்டும் என விராட் கோலி, ரோகித் சர்மா வலியுறுத்தி இருந்த நிலையில், இது குறித்த முக்கிய அப்ட்டேட் வெளியாகியுள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Jan 28 2025, 10:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐபிஎல் 2025 தொடங்கும் தேதியில் மாற்றமா? 'இம்பாக்ட் பிளேயர்' விதி நீக்கமா?  முக்கிய அப்டேட்!

ஐபிஎல் 2025 தொடங்கும் தேதியில் மாற்றமா? 'இம்பாக்ட் பிளேயர்' விதி நீக்கமா? முக்கிய அப்டேட்!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் ஐபிஎல் தொடரை பார்த்து வருகின்றனர். ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் மாதம் 21ம் தேதி தொடங்க இருக்கிறது. அடுத்த மாதம் 19ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ள நிலையில், ஐபிஎல் தொடரின் அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்தவுடன் ஐபிஎல் தொடர் தொடங்குவதால் வீரர்களுக்கு ஓய்வில் இருக்க போதிய காலஅவகாசம் இல்லை. இதனால் ஐபிஎல் தொடர் மார்ச் 21ம் தேதி திட்டமிட்டபடி தொடங்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தலைவர் அருண் துமல் இந்த விஷயத்தை தெளிவுப்படுத்தியுள்ளார். மார்ச் 21ம் தேதி திட்டமிட்டபடி  ஐபிஎல் தொடர் தொடங்கும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஐபிஎல் 2025

ஐபிஎல் 2025

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அருண் துமல், ''ஐபிஎல் சீசன் மார்ச் மாதத்தில் தொடங்கும். தொடங்கும் தேதி மார்ச் 21 என ஏற்கெனவே நிர்ணயம் செய்யபப்ட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த தேதியில் திட்டமிட்டபடி போட்டிகள் தொடங்கும். ஐபிஎல் போட்டித் தொடர் அட்டவணை விரைவில் வெளியிடப்படும்'' என்றார்.

தொடர்ந்து பேசிய அருண் துமல், ''ஐபிஎல் உலகின் மிக முக்கியமான கிரிக்கெட் லீக் ஆகும். உலகின் தரமான வீரர்கள் வந்து விளையாடுகிறார்கள். ஐபிஎல் 2025 தொடர் மற்ற ஐபிஎல் தொடர்களை விட சிறப்பாக இருக்கும். ஐபிஎல் போட்டி விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை. 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் பிளேயர் அம்சம் அப்படியே தொடரும்'' என்று தெரிவித்தார்.

ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா; வரலாற்று சாதனை!

34
இம்பாக்ட் பிளேயர் விதி என்றால் என்ன?

இம்பாக்ட் பிளேயர் விதி என்றால் என்ன?

ஐபிஎல் போட்டிகளில்'இம்பாக்ட் பிளேயர்' என்ற விதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு கிரிக்கெட் அணியில் பிளேயிங் லெவன் எனப்படும் 11 பேர் கொண்ட வீரர்கள் விளையாடுவார்கள். இது தான் விதி. ஆனால் இம்பாக்ட் பிளேயர் விதி என்பது வழக்கமான ஆடும் லெவனில் உள்ள 11 வீரர்கள் தவிர, மேலும் 5 வீரர்களை டாஸ் போடும்போது அந்தந்த அணிகள் அறிவிக்க வேண்டும். இந்த 5 வீரர்களில் யாராவது ஒருவரை தேவைக்கு ஏற்றார்போல் அணியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதாவது இந்த 5 வீரர்களில் ஒருவரை ஒரு பந்துவீச்சாளருக்குப் பதிலாக பேட்ஸ்மேனாகவோ அல்லது பேட்ஸ்மேனுக்கு பதிலாக பவுலராக பயன்படுத்திக் கொள்ளலாம். இம்பாக்ட் பிளேயர் விதியால் ஐபிஎல் அணிகளுக்கு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது ஒரு பவுலர் கிடைப்பார்கள். கடந்த 2023ம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இம்பாக்ட் பிளேயர் விதியை நீக்க வேண்டும் என்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட பலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
 

44
ரோகித் சர்மா, விராட் கோலி

ரோகித் சர்மா, விராட் கோலி

இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோகித் சர்மா, '' இம்பாக்ட் பிளேயர் தேவையில்லாத ஒன்று. இந்த விதி ஆல்ரவுண்டர்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. கிரிக்கெட் 11 வீரர்கள் விளையாடுவதாக இருக்க வேண்டுமே தவிர, 12 வீரர்கள் விளையாடுவதாக இருக்கக் கூடாது.  இம்பாக்ட் பிளேயர் விதியால் இளம் வீரர்களின் திறமை வெளியே தெரியாமல் போகிறது'' என்றார்.

ரோகித் சர்மா கருத்தை ஆமோதித்த விராட் கோலி, ''ரோஹித் சர்மாவின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். இம்பாக்ட் பிளேயர் விதி ஆட்டத்தின் சமநிலையை சீர்குலைக்கிறது. இந்த விதியை மாற்றுவது குறித்து யோசிக்க வேண்டும்'' என்றார்.

இப்படி பல்வேறு முன்னணி வீரர்கள் வலியுறுத்தியதால் 2025 ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி நீக்கப்படும் அல்லது மாற்றம் செய்யப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இம்பாக்ட் பிளேயர் விதி மாற்றப்படாது என்று ஐபிஎல் தலைவர் இப்போது கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா; வரலாற்று சாதனை!

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல் 2025
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
Recommended image2
KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!
Recommended image3
Now Playing
ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த வித்யா ராம்ராஜிற்கு உற்சாக வரவேற்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved