MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • ஐபிஎல் 2025: சொத்து மதிப்பில் 'கிங்'; ருத்ராஜ் கெய்க்வாட் இத்தனை கோடிக்கு அதிபதியா?

ஐபிஎல் 2025: சொத்து மதிப்பில் 'கிங்'; ருத்ராஜ் கெய்க்வாட் இத்தனை கோடிக்கு அதிபதியா?

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 20205 தொடர் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட்டின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
| Updated : Jan 31 2025, 05:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐபிஎல் 20205: சொத்து மதிப்பில் 'கிங்'; ருத்ராஜ் கெய்க்வாட் இத்தனை கோடிக்கு அதிபதியா?

ஐபிஎல் 20205: சொத்து மதிப்பில் 'கிங்'; ருத்ராஜ் கெய்க்வாட் இத்தனை கோடிக்கு அதிபதியா?

ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 21ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தொடரை இப்போதே ஆவலுடன் எதிர்பாக்கத் தொடங்கி விட்டனர். இந்த முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் என ஒவ்வொரு அணிகளும் என ஆயத்த ‍பணிகளை தொடங்கி விட்டன. சிஎஸ்கே என அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்லில் ஏராளமான சாதனைகளை படைத்து முதலிடத்தில் உள்ளது.

5 ஐபிஎல் கோப்பைகளை தட்டித் தூக்கியுள்ள சிஎஸ்கே இந்த முறையும் கோப்பையை அடிக்க ஆயத்தமாக இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு பல காலம் மகேந்திர சிங் தோனி தலைமை தாங்கிய நிலையில், இப்போது இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் சிஎஸ்கேவுக்கு கேப்டனாக உள்ளார்.

24
ருத்ராஜ் கெய்க்வாட்

ருத்ராஜ் கெய்க்வாட்

அந்த அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வரும் ருத்ராஜ் கெய்க்வாட், கடந்த சீசனில் மட்டும் 14 போட்டிகளில் 583 ரன்கள் குவித்துள்ளார். சேப்பாக்கத்தில் 140 ஸ்ட்ரைக் ரேட்டில் 706 ரன்கள் எடுத்துள்ளார். ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையில் சிஎஸ்கே கோப்பையை வென்று சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், இவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்ப்போம்.

ரஞ்சி டிராபியிலும் சொதப்பிய விராட் கோலி; 'பல்டி' அடித்த ஸ்டெம்ப்; நொந்துபோன ரசிகர்கள்!

34
ருத்ராஜ் கெய்க்வாட் சொத்து மதிப்பு

ருத்ராஜ் கெய்க்வாட் சொத்து மதிப்பு

2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, ருதுராஜ் கெய்க்வாட்டின் நிகர மதிப்பு 36 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு சிஎஸ்கேவுக்காக ரூ.20 லட்சம் விலைக்கு வாங்கப்பட்ட ருத்ராஜ் கெய்க்வாட், இப்போது சென்னை சூப்பர் கிங்ஸிடமிருந்து ஆண்டுதோறும் 6 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். 

ஐபிஎல் வருமானம் மட்டுமின்றி, பிசிசிஐயுடனான உள்நாட்டு கிரிக்கெட் ஒப்பந்தம் மூலம் மாதத்திற்கு 50-60 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். இது தவிர கேம்ஸ்24எக்ஸ்7, கோக்ராடோஸ் மற்றும் எஸ்எஸ் கிரிக்கெட் கிட்ஸ் போன்ற முன்னணி பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்தும் ருத்ராஜ் கெய்க்வாட் வருமானம் ஈட்டுகிறார். 

இந்தியாவுக்காக சாம்பியன்ஸ் டிராபி பாரம்பரிய நிகழ்வை ரத்து செய்த ஐசிசி; புலம்பும் பாகிஸ்தான்!

44
சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

மேலும் இவர் புத்திசாலித்தனமாக பங்குச் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் இரண்டிலும் முதலீடு செய்துள்ளார். புனேவில் இவருக்கு ரூ.8 கோடி மதிப்பிலான ஒரு வீடு உள்ளது. ஐபில் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தாலும், இந்திய அணியில் ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு தொடர்ந்து இடம் மறுக்கப்படுகிறது. இவர் 23 டி20 போட்டிகளில் விளையாடி 633 ரன்களும், 6 ஓடிஐ போட்டிகளில் 115 ரன்களும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
ஐபிஎல் 2025
ருதுராஜ் கெய்க்வாட்
சிஎஸ்கே

Latest Videos
Recommended Stories
Recommended image1
350 ஹை-டெக் AI கேமரா.. பெங்களூரு மைதானத்தில் ரோபோ கண்காணிப்பு.. ஆர்சிபி ரசிகர்கள் குஷி!
Recommended image2
கிரிக்கெட்டில் 'பேஸ்பால்' விதி: பேட்ஸ்மேன்களுக்கு இனி ஜாக்பாட்!
Recommended image3
IND vs NZ 3-வது ஓடிஐ.. வேஸ்ட் லக்கேஜ்.. ஆல்ரவுண்டரை நீக்கிய பிசிசிஐ.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved