MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • ஐபிஎல் 2025: 3 மேட்ச் வின்னிங் வீரர்கள் காயம்; கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவு!

ஐபிஎல் 2025: 3 மேட்ச் வின்னிங் வீரர்கள் காயம்; கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவு!

ஐபிஎல் 2025 சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 3 முக்கியமான வீரர்கள் காயம் அடைந்துள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக அமைநதுள்ளது.

2 Min read
Author : Rayar r
Published : Jan 28 2025, 11:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐபிஎல் 2025: 3 மேட்ச் வின்னிங் வீரர்கள் காயம்; கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவு!

ஐபிஎல் 2025: 3 மேட்ச் வின்னிங் வீரர்கள் காயம்; கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவு!

இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 21ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.  உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் ஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 2025 ஐபிஎல் தொடரில் ஏராளமான அணிகள் இப்போதே தயாராகி வருகின்றன. ஒப்பனிங் யார் விளையாட வேண்டும்? மிடில் வரிசையில் யார் விளையாட வேண்டும்? என்பது குறித்த பட்டியலை தயார் செய்து வருகின்றன. 

இந்நிலையில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக கடுமையான சவாலை எதிர்கொள்கிறது, ஏனெனில் அந்த அணியின் முக்கிய வீரர்கள் மூன்று பேர் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர. அதாவது அந்த அணியின் அதிரடி வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் மற்றும் பாஸ்ட் பவுலர்  அன்ரிச் நார்ட்ஜே காயத்தால் அவதிப்படுகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரிங்கு சிங்

ரிங்கு சிங்

ரிங்கு சிங்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மிகவும் நம்பகமான பேட்ஸ்மேனும், ஐபிஎல் 2025க்காக அணியில் தக்கவைக்கப்பட்ட முதல் வீரருமான இந்திய அணியின் டி20 நட்சத்திர வீரர் ரிங்கு சிங், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கு முன்பு காயம் அடைந்தார். இந்தியாவின் அடுத்த இரண்டு டி20 போட்டிகளில் இருந்து அவர் ஏற்கனவே விலக்கப்பட்டுள்ளார், மேலும் அவரது உடற்தகுதி குறித்த இறுதி மருத்துவ அறிக்கைக்காக அணி காத்திருக்கிறது. அவர் நீண்ட காலம் இல்லாதது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும்.

ஐபிஎல் 2025 தொடங்கும் தேதியில் மாற்றமா? 'இம்பாக்ட் பிளேயர்' விதி நீக்கமா? முக்கிய அப்டேட்!

34
வெங்கடேஷ் ஐயர்

வெங்கடேஷ் ஐயர்

வெங்கடேஷ் ஐயர்: 2021 முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துருப்புச்சீட்டாக இருக்கும் வெங்கடேஷ் ஐயர், ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்காத்தா அணியால் ரூ.23.75 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார். ரஞ்சி டிராபி தொடரின்போது வெங்கடேஷ் ஐயர் காயம் அடைந்தார். அவரது காயத்தின் தன்மை அதிகமாக இருக்கும் என கூறப்படும் நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதனால் கவலை கொண்டுள்ளது.

44
அன்ரிச் நார்ட்ஜே

அன்ரிச் நார்ட்ஜே

அன்ரிச் நார்ட்ஜே: தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே, கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பந்துவீச்சில் முக்கிய பங்கு வகித்தார். இவர் தென்னாப்பிரிக்க டி20 லீக்கின் போது காயமடைந்தார். இந்த காயத்ததால் அவர்  தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் இருந்தும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்தும் விலகி இருக்கிறார். இதனால் அவர் ஐபிஎல்லிலும் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. இறுதிக்கட்ட ஓவரில் சிறப்பாக பந்துவீசும் அன்ரிச் நார்ட்ஜே இல்லாமல் போனால் கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

ஐபிஎல் 2025: தெறிக்கவிடப்போகும் '4' வீரர்கள்; இவர்களின் அதிரடியை நிறுத்துவது கஷ்டம்!

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
ஐபிஎல் 2025
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rishabh Pant: பன்ட் அடிச்ச சிக்ஸால் டிரோன் காலி? வைரல் வீடியோவின் உண்மை என்ன?
Recommended image2
Vaibhav: இந்திய அணியில் வைபவ்.. எகிறிய மதிப்பு.. ஒரு மேட்ச் சம்பளம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
Recommended image3
IND vs AFG: கில், ராகுல் சதம், பொளந்து கட்டும் பௌலர்கள்.. 2 நாளில் ஆஃப்கானிஸ்தானை திணறடித்த இந்தியா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved