பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகும் வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வென்றார்!
பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் மல்யுத்தத்தில் 53 கிலோ பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியும், அதிக எடை காரணமாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லத் தவறிய போதிலும், அவர் தங்கப் பதக்கம் வென்றவரைப் போலவே ஹரியானாவில் கவுரவிக்கப்பட்டுள்ளார்.
Paris Olympics 2024
பாரிஸ் ஒலிம்பிக்கில் உறுதியான பதக்கம் கை நழுவிப் போனாலும், ஹரியானாவிற்குத் திரும்பியதும் பதக்கம் வென்றவரைப் போலவே சிறப்பு கௌரவம் பெறுகிறார் வினேஷ் போகத்.
Vinesh Phogat Birthday
ஞாயிற்றுக்கிழமை மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது 30வது வயதில் அடியெடுத்து வைத்தார். அவரது பிறந்தநாளில் ஹரியானா சர்வ கிராம பஞ்சாயத் அவருக்கு சிறப்பு பரிசு வழங்கியது.
வினேஷ் போகத்திற்கு தங்கப் பதக்கம்
ஞாயிற்றுக்கிழமை வினேஷ் போகத்தின் பிறந்தநாளில் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி ஹரியானா சர்வ கிராம பஞ்சாயத் கௌரவித்தது.
வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024
வினேஷ் போகத்திற்கு முன்பு எந்த ஒரு இந்திய பெண் மல்யுத்த வீராங்கனையும் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில்லை. ஆனால் பாரிஸில் வரலாறு படைத்தும் வினேஷால் பதக்கம் வெல்ல முடியவில்லை.
தகுதி நீக்கம் - வினேஷ் போகத்
பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் நாள் போட்டியின் போது வினேஷ் போகத்தின் எடை 2.8 கிலோ அதிகரித்தது. இந்த மல்யுத்த வீராங்கனை இரவு முழுவதும் எடையைக் குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவரது எடை 100 கிராம் அதிகமாக இருந்தது.
வினேஷ் போகத்
பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் மல்யுத்தத்தில் 53 கிலோ பிரிவில் இறுதிப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை சாரா ஹில்டெப்ராண்டை எதிர்கொள்ளவிருந்தார் வினேஷ் போகத். ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரால் விளையாட முடியவில்லை.
வினேஷ் போகத்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தை அணுகினார் வினேஷ் போகத். ஆனால் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படவில்லை.
வினேஷ் போகத் ஓய்வு
பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொழில்முறை மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் இன்னும் தனது ஓய்வு முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.
வினேஷ் போகத்
சில நாட்களுக்கு முன்பு ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை சந்தித்தார் வினேஷ் போகத். அதன் பிறகு அவர் காங்கிரசில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வினேஷ் போகத்
வினேஷ் போகத் கூறுகையில், 'எனது போராட்டம் இன்னும் முடிவடையவில்லை, அது இப்போதுதான் தொடங்கியுள்ளது. நம் பெண்களின் கௌரவத்திற்கான போராட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது' என்றார்.
வினேஷ் போகத் - காங்கிரஸ்
பூபிந்தர் சிங் ஹூடா கூறுகையில், 'வினேஷ் போகத் காங்கிரசில் சேர விரும்பினால், நாங்கள் அவரை வரவேற்போம்' என்றார்.
வினேஷ் போகத்
ஹரியானாவில் வினேஷ் போகத்தின் புகழ் காரணமாக, அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெற முடியும். அப்படி நடந்தால் காங்கிரசுக்குத்தான் லாபம்.