ரோகித் சர்மாவுக்கு காயம்; 4வது டெஸ்ட் விளையாடுவதில் சிக்கல்?; மீண்டும் கேப்டனாகும் பும்ரா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டிக்கான வலைப்பயிற்சியின்போது இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
Rohit Sharma Injuriy
இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. அதே வேளையில் அடிலெய்டில் 2வது பிங் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
Rohit Sharma Batting
ரோகித் சர்மா காயம்
பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்வதற்காக இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இதற்காக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வலைப்பயிற்சியின்போது இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் இடது காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. வேகப்ந்து வீச்சை எதிர்கொண்டபோது அவர் முழங்காலில் அடிபட்டுள்ளது. வலி இருந்தபோதிலும் அவர் தொடர்ந்து விளையாட முயன்றுள்ளார்.
'உங்களுக்காக நிறைய செய்தேன்; இனி எனக்காக இதை செய்யுங்க'; அஸ்வின் மனைவி உருக்கம்!
India vs Australia Test
ஐஸ் பேக்குடன் ரோகித்
ஆனால் விளையாட முடியாத அளவுக்கு காயம் இருந்ததால் ரோகித் சர்மா இறுதியில் மருத்துவ உதவியை நாடியுள்ளார். பின்பு அவர் வலியை குறைப்பதற்காக பிசியோ உதவியுடன் காலில் ஐஸ் பேக் வைத்துள்ளார். ரோகித் சர்மா காலில் ஐஸ் பேக்குடன் சேரில் அமர்ந்திருக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
ஆனாலும் ரோகித் சர்மாவின் காயம் பெரிதாக இல்லை என்றும் அவரது காயத்தை அணி மருத்துவர்வகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Jasprit Bumrah
மீண்டும் கேப்டனாகும் பும்ரா?
ரோகித் சர்மா காயம் அடைந்துள்ளதால் அவர் 4வது டெஸ்ட்டில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி அவரால் விளையாட முடியாமல் போனால் ஜஸ்புரித் பும்ரா கேப்டன் பொறுப்பை கவனிப்பார். ஏற்கெனவே பும்ரா கேப்டனாக பணியாற்றிய முதல் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது.
அதே வேளையில் ரோகித் சர்மா கேப்டனாக இருந்த 2வது டெஸ்ட்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியும், 3வது டெஸ்ட் டிராவில் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரோகித் சர்மாவின் காயம் பயப்படும்படியாக ஏதும் இல்லை என்றும் அவர் 4வது டெஸ்ட்டில் விளையாடுவார் என்றும் இந்திய வீரர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.
'டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பதில்லை'; கோலி, கில் மீது வெளிப்படையாக குற்றம்சாட்டிய ஜடேஜா!