MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • டிராவிஸ் ஹெட், ஸ்மித் சதம்; மனம் தளராமல் போராடும் பும்ரா; கம்பேக் கொடுக்கும் இந்தியா!

டிராவிஸ் ஹெட், ஸ்மித் சதம்; மனம் தளராமல் போராடும் பும்ரா; கம்பேக் கொடுக்கும் இந்தியா!

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட், ஸ்டீபன் ஸ்மித் சதம் விளாசினார்கள். பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

2 Min read
Author : Rayar A
| Updated : Dec 15 2024, 01:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
India vs Australia Test series

India vs Australia Test series

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்து விட்டன. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. அதே வேளையில் 2வது பிங் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. 

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், இடையில் புகுந்த மழை ஆட்டத்தை தடை செய்தது. மழை காரணமாக முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து இருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Travis Head Batting

Travis Head Batting

உஸ்மான் கவாஜா 19 ரன்களும், நாதன் மெக்ஸ்வீனி 4 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இன்று 2வது நாள் முன்கூட்டியே தொடங்கிய நிலையில், தொடக்க வீரர்களை பும்ரா விரைவில் வெளியேற்றினார். கவாஜா (21 ரன்),மெக்ஸ்வீனி (9 ரன்) அடுத்தடுத்து அவுட்டானார்கள். பின்பு களமிறங்கி சிறிது நேரம் தாக்குப்பிடித்த மார்னஸ் லாபுசேன் (12) நிதிஷ்குமார் ரெட்டி பந்தில் வெளியேறினார்.

இதனால் ஆஸ்திரேலியா அணி 75 3 என பரிதவித்தது. ஆனால் அதன்பிறகு களம் கண்ட டிராவிஸ் ஹெட்டும், ஸ்டீபன் ஸ்மித்தும் இந்திய பவுலர்களை எளிதாக சமாளித்து ரன்கள் சேர்த்தனர். இந்தியாவுக்கு தலைவலியாக விளங்கும் டிராவிஸ் ஹெட் வழக்கம்போல் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். மறுபக்கம் ஸ்மித் நிதானம் காட்டினார்.

'குகேஷ்க்கு ரூ.5 கோடி; மாரியப்பனுக்கு ஏதும் செய்யாமல் பாரபட்சம் காட்டினாரா மு.க.ஸ்டாலின்? உண்மை என்ன?

34
Steven Smith Batting

Steven Smith Batting

பும்ரா இவர்கள் இருவருக்கும் டாட் பால்கள் வீசி நெருக்கடி கொடுத்தாலும், மற்ற பவுலர்கள் சிறப்பாக பந்துவீசாததால் ரன்கள் விரைவாக சென்றன. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹெட் 110 பந்துகளில் சதம் விளாசினார். இது அவரது 8வது சதமாகும். அதனைத் தொடர்ந்து, மோசமான பார்மில் சிக்கித்தவித்த ஸ்மித்தும் தனது 32 சதத்தை விளாசினார்.

ஸ்கோர் 316 ஆக உயர்ந்தபோது இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். நன்றாக விளையாடிய ஸ்மித் 12 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் ரோகித்திடம் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய மிட்ச்செல் மார்சும் (5 ரன்) பும்ராவின் சூப்பர் பந்துசீச்சில் காலியானர். உடனே, அதிரடி சதம் விளாசிய ஹெட்டும் (160 பந்தில் 152 ரன்கள்) பும்ராவின் பந்தில் இரையானார். ஹெட் மொத்தம் 18 பவுண்டரிகளை விளாசினார்.
 

44
Team India

Team India

பின்பு சிறிது நேரம் தாக்குப்பிடித்த கேப்டன் பேட் கம்மின்ஸ் (20 ரன்) சிராஜ் பந்தில் விக்கெட் இழந்தார். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழந்து 405 ரன்கள் எடுத்துள்ளது. மிட்ச்செல் ஸ்டார்க் (7 ரன்), அலெக்ஸ் கேரி (45 ரன்) எடுத்து களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ஆஸ்திரேலியா 3 விக்கெடுக்கு 300 ரன்கள் எடுத்து வலுவாக இருந்த நிலையில், பும்ரா அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தி இந்தியாவுக்கு கம்பேக் கொடுத்துள்ளார். பும்ராவை தவிர மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக பந்துவீசாதது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாகும்.

ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற நாயகி PV சிந்துவுக்கு விரைவில் டும் டும் டும்

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Recommended image2
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image3
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved