ஆர்சிபியை பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்தியது எப்படி? RCB தோல்விக்கான காரணங்கள் இதுதான்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்துள்ளது. அந்த அணி தோற்றதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

How did Punjab Kings defeat RCB: ஐபிஎல் 2025 தொடரில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழை காரணமாக இந்த போட்டி 14 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி பஞ்சாப் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 14 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. டிம் டேவிட் தனி ஆளாக போராடி 26 பந்தில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்தார்.
PBKS vs RCB
ஆர்சிபி அணி தோல்வி
பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், யான்சென், யுஸ்வேந்திர சஹல், ஹர்பிரித் பிரார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்பு பேட்டிங் செயத பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நேஹல் வதேரா 24 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஆர்சிபி தரப்பில் ஹோஸ் ஹேசில்வுட் 3 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி இருந்தாலும் குறைவான இலக்கு என்பதால் வெற்றி பெற முடியவில்லை. இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
RCB, IPL
பேட்டிங் யூனிட் சொதப்பல்
பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, பில் சால்ட், கேப்டன் ரஜத் படிதார் என அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பியதே வெற்றிக்கு முதன்மையான காரணமாகும். ஏற்கெனவே மழை பெய்து பந்து நின்று வந்த நிலையில், சூழநிலைக்கேற்ப ஆடாமல் அவசர கதியில் தவறான ஷாட்களை ஆடி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். டிம் டேவிட் மட்டும் அந்த 50 ரன்கள் அடிக்கவில்லை என்றால் ஆர்சிபி நிலைமை இன்னும் பரிதாபமாக இருந்திருக்கும்.
தேவ்தத் படிக்கல் ஏன் இல்லை?
நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணியில் இடதுகை ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் சேர்க்கப்படவில்லை. இது ஒரு தவறான முடிவாக அமைந்து விட்டது. நேற்று ஆர்சிபியில் குர்னால் பாண்ட்யாவை தவிர இடதுகை பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை. தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டு இருந்தால் பஞ்சாப் கிங்ஸ்ஸின் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி இருப்பார். மேலும் மெதுவான ஆடுகளத்தில் மிகவும் சரியான பேட்ஸ்மேனாக இருந்திருப்பார்.
IPL 2025, Cricket
அர்ஷ்தீப் சிங் புதிய சாதனை
நேற்றைய போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். அர்ஷ்தீப் சிங் 2019 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுகமானார். அந்த அணிக்காக விளையாடி 6 ஆண்டுகளிலேயே அவர் சாதனை படைத்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிராக பில் சால்ட்டை அவுட் செய்த பிறகு அவர் இந்த சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் அவர் பில் சால்ட், கோலியை பெவிலியன் அனுப்பினார். பஞ்சாப் அணிக்காக அர்ஷ்தீப் இதுவரை 86 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த அணிக்காக பியூஷ் சாவ்லா 84 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மூன்றாவது இடத்தில் சந்தீப் சர்மா உள்ளார். அவர் 73 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் சிலர் நிர்வாண படங்கள் அனுப்பினர்! சஞ்சய் பங்கர் மகள் பகீர் குற்றச்சாட்டு!
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.