MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • IPL New Rules: இனி வைடு பால் சிக்கல் இல்லை! ஐபிஎல்லில் அதிநவீன தொழில்நுட்பம்!

IPL New Rules: இனி வைடு பால் சிக்கல் இல்லை! ஐபிஎல்லில் அதிநவீன தொழில்நுட்பம்!

ஐபிஎல்லில் வைடு பால்களை கணிக்க ஹாக்-ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
| Updated : Mar 21 2025, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

IPL New Rules: Hawk-Eye technology: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை முதல் கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. வரும் ஐபிஎல் தொடரில் பல்வேறு விதிகள் கொண்டு வரப்பட உள்ளன. பல்வேறு பவுலர்களின் கோரிக்கையை ஏற்று ஐபிஎல்லில் வீரர்கள் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்த பிசிசிஐ அனுமதி அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

24
IPL New Rules

IPL New Rules

மேலும் ஐபிஎல்லில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் 2வது புதிய பந்து விதியை அறிமுகப்படுத்த உள்ளது. ஐபிஎல்லில் இரண்டாவது பவுலிங் செய்யும் அணிகள் பனியின் தாக்கம் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகின்றன. பனியின் காரணமாக பவுலர்கள் பந்தை கிரிப் செய்ய முடியாததால் அது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைகிரது. இதனால் ரன்கள் அதிகமாக செல்கிறது. இதை தவிர்க்கும் 2வது இன்னிங்சில் 11வது ஓவருக்கு மேல் புதிய பந்து பயன்படுத்தப்படும்.

இந்நிலையில் ஐபிஎல்லில் ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியேயும் பேட்டர் தலைக்கு மேலேயும் வைடுகளை மதிப்பிடுவதற்கு ஹாக்-ஐ தொழில்நுட்பத்தைப் (Hawk-Eye technology) பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2024 இல் இடுப்புக்கு மேல் நோ-பால்களை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்பம் இப்போது ஓவர்-தி-ஹெட் வைடுகளுக்கும் செயல்படுத்தப்படும்.

IPL: கோப்பை ஏக்கத்தை தணிக்குமா ஆர்சிபி? பலம், பலவீனம் என்ன? பிளேயிங் லெவன் எப்படி?

34
IPL New Rules 2025

IPL New Rules 2025

ஐபிஎல்லில் தலைக்கு மேல் செல்லும் பந்துகளை வைடு பால் அறிவிப்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்தது.  தலைக்கு மேல் செல்லும் பந்துகளை சில நேரங்களில் நடுவர்கள் வைடு என அறிவிப்பதும், சில நேரங்களில் சரியான பந்துதான் என அறிவிப்பதாலும் தெளிவான முடிவுகள் கிடைக்கவில்லை. இந்த குழப்பத்தை தவிர்ப்பதற்காக தான் ஹாக்-ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. 

44
Hawk-Eye technology IPL

Hawk-Eye technology IPL

இந்த  ஹாக்-ஐ தொழில்நுட்பம் பந்து பாப்பிங் கிரீஸில் பேட்டரைக் கடக்கும்போது அதன் உயரத்தை மதிப்பிடும் மற்றும் அதை பேட்டர் கால் முதல் தலை வரை உயரத்துடன் நேர்மையான நிலையில் ஒப்பிடும். ஒவ்வொரு வீரரின் தலை உயரமும் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படும். ஹாக்-ஐ அமைப்பு பந்துகள் வீசப்படும்போது பேட்டரின் இயக்கத்தின் அளவையும் வழிகாட்டுதலில் தொடர்புடைய மாற்றத்தையும் தானாகவே அளவிடும்.

இதன்மூலம் தலைக்கு மேலே செல்லும் பந்துகள் வைடா? இல்லையா? என்பதை துல்லியமாக கணிக்க முடியும். ஐபிஎல்லின் முதல் போட்டியில் இருந்தே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டிகளை எந்த டிவியில் பார்க்கலாம்? ஓடிடியில் இலவசமாக பார்ப்பது எப்படி?

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல் புதிய விதிகள்
ஐபிஎல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs ZIM: இந்தியா பிளேயிங் லெவனில் 'செம' ட்விஸ்ட்.. 3 அதிரடி வீரர்கள் நீக்கம்.. இது லிஸ்ட்லயே இல்லையே!
Recommended image2
இமாலய வெற்றியை பதிவு செய்த WI.. இலவு காத்த கிளியாகும் இந்தியாவின் அரையிறுதி கனவு..?
Recommended image3
மின்னல் வேக அரைசதம்; வான்கடேவில் ருத்ரதாண்டவம் ஆடிய ஹெட்மயர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved