இனி சிக்சர் மழை தான்! சிஎஸ்கேவில் இணைந்த 'பேபி டி வில்லியர்ஸ்'! தோனியின் ஸ்மார்ட் மூவ்!
சிஎஸ்கே அணியில் குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் பிரெவிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அதிரடி வீரரான டெவால்ட் பிரெவிஸ், ஏபி டி வில்லியஸ் போன்று விளையாடுவார்.

Dewald Brevis addition to CSK: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. தினமும் போட்டிகள் விறுவிறுப்பாக சென்று வருகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் அணி என எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் படுமோசமாக சொதப்பி வருகிறது. தொடர்ந்து 5 போட்டிகளில் தோற்ற சிஎஸ்கே நீண்ட நாளைக்கு பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.
Dewald Brevis, CSK
சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 5ல் தோல்வி அடைந்து 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சிஎஸ்கே தனது அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வரும் 20ம் தேதி விளையாட உள்ளது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் இளம் சர்வதேச வீரர் டெவால்ட் பிரெவிஸ் சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே பட்டியலில் ஒரு வெளிநாட்டு இடம் மீதமுள்ளதால், குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் பிரெவிஸை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஏலத்தில் பிரெவிஸின் அடிப்படை விலை 75 லட்சம் ரூபாய் மட்டுமே என்றாலும், சிஎஸ்கே அவரை 2.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது. டெவால்ட் பிரெவிஸ் ஏற்கனவே ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மொத்தம் 10 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
MIக்கு எதிரான போட்டியில் புதிய கேப்டனை தேடும் CSK! தோனிக்கு என்ன ஆச்சி?
CSK, IPL
21 வயதான டெவால்ட் பிரெவிஸ் ஏற்கெனவே 81 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 145 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் SA20 போட்டியில் பிரெவிஸ் மிகவும் நல்ல ஃபார்மில் இருந்தார். போட்டியின் முதல் 10 ரன் குவிப்பாளர்களில், 184.17 என்ற அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்டுடன் முடித்தார். டெவால்ட் பிரெவிஸ் பேட்டிங் மட்டுமின்றி ஸ்பின் பவுலிங்கும் போடுவார்.
தென்னாப்பிரிக்காவில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் மற்றும் உலகின் டி20 கிரிக்கெட்டில் வேகமான 150 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை வைத்திருக்கிறார். டெவால்ட் பிரெவிஸ் டி வில்லியர்ஸ் போன்றே அதிரடி ஷாட்களை விளையாடுவதால் 'பேபி டி வில்லியர்ஸ்' என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
MS Dhoni, Cricket
சிஎஸ்கே அணியில் அதிரடி ஆட்டக்காரர்களுக்கு பெரும் பஞ்சம் நிலவி வருகிறது. பெரிதும் எதிர்பார்த்த ஷிவம் துபே ரன்கள் அடிக்கவே திணறுகிறார். இதனால் தான் மற்ற அணிகளை விட சிஎஸ்கே குறைவான சிக்சர்களை அடித்துள்ளது. இந்த நிலையில் தான் அதிரடியில் பட்டையை கிளப்பும் டெவால்ட் பிரெவிஸ் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். இவர் பாஸ்ட் பவுலிங் மட்டுமின்றி, ஸ்ப்பின்னும் நன்றாக விளையாடுவார். டெவால்ட் பிரெவிஸ் தேர்வு தோனியின் ஸ்மார்ட் மூவ் ஆக பார்க்கப்படுகிறது.
CSK vs MI: இவரால் பட்டபாடு போதும்! இளம் வீரரை நீக்கிய தோனி! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!