சொந்த மண்ணில் மும்பையை ஓட விட்டது எப்படி? சிஎஸ்கே வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள்!
ஐபிஎல்லில் மும்பைக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்ற நிலையில் சிஎஸ்கே வெற்றிக்கு காரணமான 5 வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

4 important reasons for CSK's victory against MI: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்தது.
IPL 2025, CSK vs MI, Cricket
சிஎஸ்கே அணியின் நூர் அகமது 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கலீல் அகமது 3 விக்கெட் சாய்த்தார். பின்பு விளையாடிய சிஎஸ்கே 19.1 ஓவரில் 6 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் 6 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 26 பந்தில் 53 ரன்கள் அடித்தார். ரச்சின் ரவீந்திரா 45 பந்தில் 4 சிக்சர் 2 பவுண்டரியுடன் 65 ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றி பெறச்செய்தார். மும்பை அணியில் விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட் வீழ்த்தினார். 4 விக்கெட் சாய்த்த சிஎஸ்கேவின் நூர் அகமது ஆட்டநாயகன் விருது வென்றார்.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் வெற்றி பெற்றதற்கான 5 காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
Sports news Tamil, Noor Ahmed
நூர் அகமது
சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முதன்மையான காரணம் இடதுகை ஸ்பின்னரான நூர் அகமது தான். 4 ஓவர்களில் 18 ரன்களில் 4 விக்கெட் வீழ்த்தி மேட்ச் வின்னராக ஜொலித்துள்ளார். மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா என முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கேவின் வெற்றிக்கு வழிவகுத்தார். இவரின் பந்துவீச்சில் ரன் எடுக்க எதிரணி பேட்ஸ்மேன்கள் தடுமாறி அப்பட்டமாக தெரிந்தது. சென்னை பிட்ச்சில் நூர் அகமதுவின் விக்கெட் வேட்டை இன்னும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
ருந்ராஜ் கெய்க்வாட்
சிஎஸ்கே கேப்டன் ருந்ராஜ் கெய்க்வாட் 26 பந்தில் 53 ரன்கள் அடித்து சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய அடித்தளம் அமைத்தார். பேட்டிங்கில் மட்டுமின்றி கேப்டன்சியிலும் ருத்ராஜ் அசத்தினார். டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்ததாகட்டும், பவுலர்களை ரொட்டேட் செய்ததாகட்டும் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டார்.
IPL 2025 CSK vs MI: மின்னலை மிஞ்சிய வேகம்.. தோனியின் சூப்பர் ஸ்டம்பிங்; ஷாக்கான சூர்யகுமார் யாதவ்!
cricket news in tamil, IPL, Rachin Ravindra
ரவீந்திர ஜடேஜா
பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் துருப்புச்சீட்டாக விளங்கி வரும் ரவீந்திர ஜடேஜா நேற்றைய போட்டியிலும் அதை செய்து காட்டினார். 3 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் பந்துவீச்சில் சிக்கனம் காட்டினார். மேலும் பேட்டிங்கில் முக்கியமான நேரத்தில் 17 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். ஜடேஜா மட்டும் முன்கூட்டியே அவுட் ஆகி இருந்தால் சிஎஸ்கேவின் வெற்றி கேள்விக்குறியாகி விடும்.
ரச்சின் ரவீந்திரா
சமீப காலமாக சூப்பர் பார்மில் இருக்கும் ரச்சின் ரவீந்திரா நேற்றும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்கம் முதலே அவசரம் காட்டாமல் சூழலுக்கேற்றபடி பொறுமையாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா கடைசி வரை களத்தில் இருந்து அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். பாஸ்ட் பவுலர்கள் மட்டுமின்றி ஸ்பின்னர்களையும் இவர் சிறப்பாக விளையாடுவதால் சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டாக ரச்சின் ரவீந்திரா இருப்பார்.
கலீல் அகமது
சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியமானவர்களில் ஒருவர் கலீல் அகமது. 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே கொடுத்த கலீல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன் ஆகிய முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நூர் சுழல், ரச்சின் அதிரடி: கடைசியி கிடைத்த தோனியின் தரிசனம்; மும்பையை வீழ்த்திய CSK