சிஎஸ்கேவில் ருத்ராஜ்க்கு பதிலாக இடம்பிடித்த 17 வயது வீரர்! யார் இந்த ஆயுஷ் மத்ரே?
சிஎஸ்கேவில் ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயது வீரர் ஆயுஷ் மத்ரே சேர்க்கப்பட்டுள்ளார். யார் இந்த ஆயுஷ் மத்ரே? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

CSK Added 17 year Old Ayush Mhatre: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சிஎஸ்கே அதன்பிறகு தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்து வெறும் 2 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
CSK, Ayush Mhatre
பேட்டிங், பீல்டிங்கில் என அனைத்திலும் சிஎஸ்கே படுமோசமாக இருக்கிறது. இதற்கிடையே சிஎஸ்கே அணி மேலும் பலவீனமடையும் வகையில் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேறினார். தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயது வீரர் ஆயுஷ் மத்ரே சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ருத்ராஜ்க்கு பதிலாக பிரித்வி ஷா அணியில் சேர்க்கப்படுவார் என தகவல்கள் பரவி வந்த நிலையில், ஆயுஷ் மத்ரே சேர்க்கப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த ஆயுஷ் மத்ரே அதிரடி வீரர் ஆவார். ரூ.30 லட்சம் அடிப்படை விலையுடன் இருந்த மத்ரே, ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் போது விற்கப்படாமல் இருந்தார். ஆனால் கெய்க்வாட்டின் காயத்தால் இப்போது அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. லக்னோவுக்கு எதிராக சிஎஸ்கே இன்று விளையாட உள்ள நிலையில், ஆயுஷ் மத்ரே இந்த போட்டியில் இடம்பெற வாய்ப்பில்லை.
தொடர் புறக்கணிப்பு! அவமானம்! 1077 நாட்களுக்கு பிறகு தன்னை நிரூபித்த கருண் நாயர்! யார் இவர்?
IPL, Cricket
ஆனால் 20ம் தேதி மும்பைக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. ஆயுஷ் மத்ரே கடந்த அக்டோபரில் இரானி டிராபியில் உள்ளூர் போட்டிகளில் அறிமுகமானார். பிரித்வி ஷாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 19 ரன்கள் எடுத்தார். ஜம்மு & காஷ்மீருக்கு எதிரான மும்பை ரஞ்சி டிராபி போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விளையாடியபோது, மத்ரே அவருக்கு பதிலாக இடம்பிடித்தார்.
CSK, Asianet news Tamil
ஆயுஷ் மத்ரே ஒன்பது முதல் தர போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரை சதத்துடன் 504 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை விளையாடிய ஏழு லிஸ்ட் ஏ போட்டிகளில், மத்ரே இரண்டு சதங்களுடன் 458 ரன்கள் அடித்துள்ளார். பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் சிறப்பாக செயல்படும் ஆயுஷ் மத்ரே, உள்நாட்டு கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதில் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா விக்கெட்டும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Virat Kohli: விராட் கோலியின் 10th மார்க் ஷீட் வைரல்! எவ்ளோ மார்க் தெரியுமா?