MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • இந்திய அணியின் ஜெர்சியில் 'பாகிஸ்தான்' பெயர் அச்சிடப்படாதா? மெளனம் கலைத்த பிசிசிஐ; என்ன சொன்னது?

இந்திய அணியின் ஜெர்சியில் 'பாகிஸ்தான்' பெயர் அச்சிடப்படாதா? மெளனம் கலைத்த பிசிசிஐ; என்ன சொன்னது?

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் அச்சிட மறுப்பு தெரிவித்தாக வெளியான தகவலுக்கு பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Jan 23 2025, 09:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
BCCI

BCCI

சாம்பியன்ஸ் டிராபி 

'மினி உலகக்கோப்பை' என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் முதலில் பாகிஸ்தானில் தான் நடைபெற இருந்தது. ஆனால் இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்தது. 

இதனால் இந்தியா மோதும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும் என ஐசிசி அறிவித்தது. ஏற்கெனவே இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்தற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் அச்சிட பிசிசிஐ மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Indian Cricket Team

Indian Cricket Team

பாகிஸ்தான் பெயர் அச்சிட மறுப்பு 

சாம்பியன்ஸ் டிராபிக்கான அனைத்து அணிகளின் ஜெர்சியிலும் எந்த நாடு போட்டியை நடத்துகிறதோ அந்த அணியின் பெயர் லோகோவுடன் இணைத்து அச்சிடப்படும். இப்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துவதால் அந்த அணியின் பெயர் அனைத்து நாடுகளிலும் ஜெர்சியிலும் இடம்பெறும். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பிசிசிஐ, இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெறக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும், பாகிஸ்தான் பெயர் இல்லாமல் ஜெர்சி அடிக்கும்படி வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தன.

சாஹலை ஓவர்டேக் செய்து டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி அர்ஷ்தீப் சிங் சாதனை!

35
Champions Trophy 2025

Champions Trophy 2025

பாகிஸ்தான் கண்டனம் 

இதற்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள், ''பிசிசிஐ கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டுவருகிறது. இது விளையாட்டுக்கு நல்லதல்ல. இந்திய அணியினர் ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய மறுத்துவிட்டனர். சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழாவிற்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை அனுப்ப விரும்பவில்லை. இப்போது அவர்கள் தங்கள் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரை அச்சிட விரும்பாததது சரியானது அல்ல'' என்று தெரிவித்து இருந்தனர்.

உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய தொடர்களை எந்த நாடு நடத்துகிறதோ அந்த நாட்டின் பெயர் அனைத்து அணிகளின் ஜெர்சியிலும் அச்சடிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். கடந்த 2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா நடத்தியபோது இந்திய அணியின் பெயர் பாகிஸ்தான் ஜெர்சியில் இடம்பெற்று இருந்தது.

இதனால் விளையாட்டில் அரசியலை கலக்கக் கூடாது என்று பாகிஸ்தானை சேர்ந்த நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் இந்தியர்கள் சிலரும் பிசிசிஐக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

45
Indian team  jersey

Indian team jersey

பிசிசிஐ விளக்கம் 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ கவுனம் கலைத்துள்ளது. இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் அச்சிட மறுப்பு தெரிவிக்கவில்லை என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''சாம்பியன்ஸ் டிராபியின் போது ஐசிசி நிர்ணயித்த ஆடைக் குறியீட்டை இந்திய கிரிக்கெட் அணி கடைப்பிடிக்கும். 

சாம்பியன்ஸ் டிராபி லோகோ மற்றும் ஆடைக் குறியீடு தொடர்பாக மற்ற அணிகள் என்ன செய்கிறதோ, அதையே நாங்களும் பின்பற்றுவோம். இது தொடர்பாக ஊடகங்களில், சமூகவலைத்தளஙகளில் பரவும் ஊகங்களை யாரும் நம்ப வேண்டாம்'' என்று தெரிவித்தார்.

 

55
India-Pakistan Match

India-Pakistan Match

இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போது? 

பிப்ரவரி 19ம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 

குரூப் ஏ பிரிவில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த தொடர் தொடங்கும் பிப்ரவரி 19ம் தேதி நியூசிலாந்தும், பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்தியா பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23ம் தேதி நடைபெற உள்ளது.

டெஸ்ட் தோல்விக்கு பிறகு முதல் வெற்றி: வருண் சுழல், அபிஷேக்கின் அதிரடியால் இந்தியா வெற்றி!

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli Retirement Date: விராட் கோலியின் ஓய்வு தேதி இதுதானா? 2027 உலகக்கோப்பை குறித்து அவரே சொன்ன தகவல்
Recommended image2
Asian Games 2026: 3வது தங்கத்தை கையில் ஏந்திய இந்தியா! ஈரானை வீழ்த்தி இந்திய மகளிர் கபடி அணி அபாரம்!
Recommended image3
Asian Games 2026: 2வது தங்கத்தை தட்டித் தூக்கிய இந்தியா! துப்பாக்கி சுடுதலில் கமல்ஜீத் - சுருசி சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved