பிவி சிந்துவிற்கு ரூ.73 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை கொடுத்த நடிகர் நாகர்ஜூனா!
ஒலிம்பிக் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவின் சொத்து மதிப்பு ரூ.59 கோடி. அவரது சொத்துக்களில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா பரிசாக அளித்த ரூ.73 லட்சம் மதிப்புள்ள BMW காரும் அடங்கும். சச்சின் டெண்டுல்கரின் முயற்சியால் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த கார் வழங்கப்பட்டது.
PV Sindhu
ஆந்திரா மாநிலம் (தற்போது தெலங்கானா) ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நாட்டிற்காக பேட்மிண்டன் விளையாடி வருகிறார். இதுவரையில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் 457 வெற்றி மற்றும் 201 தோல்விகளை சந்தித்துள்ளார்.
PV Sindhu
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆனால், பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வெறுங்கையோடு நாடு திரும்பினார். ஒலிம்பிக் பதக்கம் மட்டுமின்றி உலக சாம்பியன்ஷிப் தொடரிலும் தங்கம், வெள்ளி, வெணகலப் பதக்கம் வென்று கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
PV Sindhu
இது தவிர உபர் டிராபி, காமன்வெல்த் கேம்ஸ், ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் யூத் கேம்ஸ், ஆசிய ஜூனியர் விளையாட்டு தொடர்களில் பல பதக்கங்கள் குவித்துள்ளார். இந்த நிலையில் தான் இவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்த்தால் ரூ.59 கோடியாம். இதில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா பரிசாக கொடுத்த ரூ.73 லட்சம் மதிப்பிலா பிஎம்டபிள்யூ காரும் உண்டு.
Badminton Player PV Sindhu
ஹைதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் தலைமை பயிற்சியாளர் பி கோபி சந்த் முன்னிலையில், நடிகர் அக்கினேனி நாகர்ஜூனா இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்துவிற்கு புத்தம் புதிய BMW கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.
PV Sindhu
இது நடந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா பேட்மிண்டன் சங்கத்தின் துணைத் தலைவர் வி. சாமுண்டீஸ்வரநாத் கலந்து கொண்டார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் முயற்சியால், ஒரே எண்ணம் கொண்ட நண்பர்கள் ஒன்றிணைந்து பணம் சேர்த்து இளம் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு கார்களை வழங்கி வருகிறார். சாமுண்டீஸ்வரநாத் வழங்கிய 22ஆவது கார் இதுவாகும்.
PV Sindhu BMW Car
இது குறித்து நாகர்ஜூனா, சிறந்த சாதனையாளர்களை கௌரவிப்பது சாமுண்டியின் ஒரு பகுதியாக இருக்கிறது. மேலும், இளம் சாதனையாளர்களையும் முன் வைக்கிறார் என்றார். மேலும், இது போன்ற சாம்பியன்களை உருவாக்க கோபியின் முயற்சிகளுக்கும், சிந்துவின் பெற்றோர்களான பிவி ரமணா மற்றும் பி விஜயா ஆகியோருக்கும், சிந்து போன்ற சாம்பியனை நாட்டிற்கு கொடுத்ததற்காக வாழ்த்துக்கள் என்றார்.