MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • 24, 5, 10, 0, 24 தடுமாறும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் – டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா?

24, 5, 10, 0, 24 தடுமாறும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் – டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா?

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய நிலையில் தற்போது ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன்கள் சேர்ப்பதில் திணறி வரும் நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 10 2024, 08:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Yashasvi Jaiswal

Yashasvi Jaiswal

இந்தியா வந்த இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெற்று விளையாடியவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இதில், 5 போட்டிகளில் 80, 15, 209, 17, 10, 214, 73, 37,57 என்று மொத்தமாக 712 ரன்கள் குவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Yashasvi Jaiswal, IPL 2024, Rajasthan Royals

Yashasvi Jaiswal, IPL 2024, Rajasthan Royals

இதில், 2 இரட்டை சதம், 3 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியதைத் தொடர்ந்து நேரடியாக டி20 பார்மேட்டான ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.

37
Yashasvi Jaiswal, T20 World Cup 2024

Yashasvi Jaiswal, T20 World Cup 2024

ஆனால், இதுவரையில் இன்றைய போட்டி உள்பட ராஜஸ்தான்ர் ராயல்ஸ் 5 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த சீசனில் அதிரடிக்கு பெயர் போன யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24, 5, 10, 0, 24 என்று மொத்தமாக 63 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறார்.

47
Yashasvi Jaiswal, RR

Yashasvi Jaiswal, RR

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழாவைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி இந்த மாதம் இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் தொடக்கத்திலோ அறிவிக்கப்பட இருக்கிறது.

57
RR vs GT Live Score

RR vs GT Live Score

டி2ப் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டுமானால் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும். ஆனால், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதே ஃபார்மில் விளையாடி வந்தால் இந்த தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நீக்கப்படுவதோடு, இந்திய அணியிலும் இடம் பெற மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

67
Rajasthan Royals

Rajasthan Royals

ஏற்கனவே இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், ஷுபம் துபே, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் ஆகியோர் வரிசை கட்டி நிற்கும் போது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

77
RR vs GT Live Score, 24th IPL Match

RR vs GT Live Score, 24th IPL Match

இதுவரையில் 5 போட்டிகள் மட்டுமே முடிந்த நிலையில் இன்னும் 9 போட்டிகள் இருக்கிறது. இதுவரையில் சரியாக விளையாடாவிட்டாலும் இனி வரும் போட்டிகளில் ஜெய்ஸ்வால் டி20 போட்டிக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு விளையாடினால் மட்டுமே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
குஜராத் டைட்டன்ஸ்
இந்தியன் பிரீமியர் லீக்
ராஜஸ்தான் ராயல்ஸ்
ஷுப்மன் கில்
யுஸ்வேந்திர சாஹல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs AFG Test: அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்! மாஸ் காட்டிய மானவ் சுதார்! யார் இந்த 'குட்டி' ஜடேஜா!
Recommended image2
Suryakumar Yadav: மும்பை இந்தியன்ஸை விட்டு வௌியேறும் சூர்யகுமார் யாதவ்..? இன்ஸ்டாவில் அதிரடி!
Recommended image3
Rishabh Pant: பன்ட் அடிச்ச சிக்ஸால் டிரோன் காலி? வைரல் வீடியோவின் உண்மை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved