India vs Bangladesh 1st Test: இந்திய அணியின் டாப் 4 பீல்டர்ஸ் யார்? பயிற்சியாளர் திலீப் சொன்ன சீக்ரெட்ஸ்!
India vs Bangladesh Test, India's Best Fielders: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் டாப் 4 பீல்டர்ஸ் யார் யார் என்று இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் கூறியுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது சிராஜ் ஆகியோரது பெயரை சுட்டிக் காட்டியுள்ளார்.
IND vs BAN 1st Test
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் டாப் 4 பீல்டர்ஸ் யார் யார் என்று இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக சமீபத்திய போட்டிகளில் இந்திய அணியின் பீல்டிங் தனித்துவமாக உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு இந்திய அணி வீரர்களின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளார். அதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது சிராஜ் ஆகியோரது பெயரை சுட்டிக் காட்டியுள்ளார்.
India vs Bangladesh Test
யஷஸ்வி ஜெய்ஸ்வால்:
ஜெய்ஸ்வால் தனது தடகள திறமையை தொடர் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளார். அவரது கேட்ச் மற்றும் ஷார்ட் லெக்கில் அவர் பிடித்த கேட்ச் ரசிகர்களை மட்டுமின்றி பயிற்சி ஊழியர்களையும் வெகுவாக கவர்ந்தது.
கேஎல் ராகுல்:
நீண்ட காலத்திற்கு பிறகு டெஸ்ட் போட்டிக்கு திரும்பிய கேஎல் ராகுல் பீல்டிங்கில் சிறந்து விளங்குகிறார். குறிப்பாக மிட் ஆன் திசையில் நின்று கேஎல் ராகுல் பிடித்த கேட்ச் பலரையும் வியக்க வைத்தது.
முகமது சிராஜ்:
சென்னை டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் தனது அற்புதமான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். எப்போதும் அவர் டைவ் அடித்து கடினமான கேட்சுகளை கூட எடுக்க தயாராக இருக்கிறார்.
Chennai Test
விராட் கோலி:
விராட் கோலியின் பீல்டிங் எப்போதும் சிறப்பம்சமாக இருக்கும். மேலும், அவரது போட்டியின் தீவிரமான அர்ப்பணிப்பு, பீல்டிங்கிலும் தெரிகிறது. பேட்டிங்கில் அவர் காட்டும் தீவிரம் பீல்டிங்கிலும் தொடர்கிறது. விராட் கோலி சக வீரர்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறார்.
பிசிசிஐயின் வீடியோவில் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் கூறியிருப்பதாவது: யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அற்புதமான கேட்ச்சை பாராட்டினார். ஜெய்ஸ்வாலைத் தொடர்ந்து கேஎல் ராகுல் மிட் ஆன் திசையில் சிறப்பாக கேட்ச் பிடித்தார்.
Chepauk Stadium, Chennai Test
விராட் கோலி பற்றி அனைவரும் அறிந்த ஒன்று தான். அவரது பயிற்சிக்கும், அவர் விளையாடும் விதத்திற்கும் எந்த வித்தியாசமும் இருக்காது என்றார். இதற்கு முன்னதாக பயிற்சியாளர் டி திலீப்பை ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டினார். இந்தியாவின் ஸ்லிப் பீல்டிங்கை மேம்படுத்துவதில் திலீப்பின் பங்கு அதிக முக்கியத்துவம் பெற்றது. ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்த போது பொறுப்பேற்ற டி திலீப் தொடர்ந்து கவுதம் காம்பீர் தலைமையிலும் இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்கிறார்.
India vs Bangladesh, Test Cricket
சென்னை டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் 27 ஆம் தேதி கான்பூரில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெற்ற வீரர்கள் தான் 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் இடம் பெற்று விளையாட இருக்கின்றனர். இதுவரையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய 14 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 12 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டி டிராவில் முடிந்துள்ளது.
இதுவரையில் இந்தியா விளையாடிய 580 டெஸ்ட் போட்டிகளில் 179 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 178 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. அதே போன்று 222 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.