IPL 2023: தோனி ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்திருந்தால் 3 முறை டைட்டில் ஜெயித்திருப்பார்! வாசிம் அக்ரம் அதிரடி
தோனி ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்திருந்தால் 3 முறை கோப்பையை ஜெயித்திருப்பார் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் உலகின் மிகப்பெரிய மற்றும் பணக்கார டி20 லீக் தொடர். 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 5 முறையும், சிஎஸ்கே அணி 4 முறையும் கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன.
அதேவேளையில், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடஸ்ள் அணிகள் ஒருமுறை கூட கோப்பையை வெல்லமுடியாமல் முதல் முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் ஒவ்வொரு சீசனிலும் களமிறங்கி ஏமாற்றமடைந்துவருகின்றன.
விராட் கோலியால் ஆர்சிபி அணிக்கு ஒருமுறை கூட கோப்பையை வென்று கொடுக்க முடியாத நிலையில், ரோஹித்தும் தோனியும் கோப்பையை வெல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரமிடம் தோனி மட்டும் ஆர்சிபியின் கேப்டனாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற கேள்விக்கு, ஆர்சிபிக்கு 3 முறை கோப்பையை வென்று கொடுத்திருப்பார் என்று தெரிவித்தார்.