IPL 2023: ஐபிஎல்லின் தலைசிறந்த வீரர்கள் அவங்க 2 பேர் தான்.. விராட் கோலி கருத்து..! அந்த 2 பேரில் தோனி இல்ல
ஐபிஎல்லின் தலைசிறந்த வீரர்கள் என்று இருவரை குறிப்பிட்டுள்ளார் விராட் கோலி. அந்த இருவரில் 4 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டனும், கோலியின் குரு போன்றவருமான தோனி இல்லை.
ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஐபிஎல்லில் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் 4 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே ஆகிய 2 அணிகளும் வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன.
கேகேஆர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், கடந்த சீசனில் புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி கூட கோப்பையை வென்றுவிட்டது. ஆனால் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.
ஐபிஎல்லில் 4 முறை கோப்பையை வென்ற தோனி, 5 முறை கோப்பையை வென்ற ரோஹித் சர்மா ஆகிய இருவரும் வெற்றிகரமான கேப்டன்கள்.
விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, கிறிஸ் கெய்ல், ஏபி டிவில்லியர்ஸ், ஃபாஃப் டுப்ளெசிஸ், கைரன் பொல்லார்டு, லசித் மலிங்கா, டேவிட் வார்னர் ஆகியோர் ஐபிஎல்லின் வெற்றிகரமான மற்றும் ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்திய முக்கியமான வீரர்களாக திகழ்கின்றனர்.
இந்நிலையில், ஐபிஎல்லில் தலைசிறந்த வீரர் யாரென்ற கேள்விக்கு, ஆர்சிபியில் தனது பழைய பார்ட்னரான ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸின் முன்னாள் மேட்ச் வின்னிங் ஃபாஸ்ட் பவுலர் லசித் மலிங்காவையும் தெரிவித்துள்ளார் விராட் கோலி. தோனியின் பெயரை கோலி கூறவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றதில் மலிங்காவின் பெரும் பங்களிப்பு உள்ளது. ஐபிஎல்லில் 122 போட்டிகளில் ஆடி 177 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.