MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Virat Kohli: 'இந்த குணம் என்னை விட்டு எப்போதும் போகாது'.. வெளிப்படையாக போட்டு உடைத்த விராட் கோலி!

Virat Kohli: 'இந்த குணம் என்னை விட்டு எப்போதும் போகாது'.. வெளிப்படையாக போட்டு உடைத்த விராட் கோலி!

Virat Kohli: 2027 ஓடிஐ உலகக்கோப்பை குறித்து கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி வெளிப்படையாக பேசியுள்ளார். தன்னிடம் இருக்கும் அந்த குணம் எப்போதும் போகாது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 27 2026, 01:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மனம் திறந்து பேசிய விராட் கோலி
Image Credit : bcci

மனம் திறந்து பேசிய விராட் கோலி

"உலகக்கோப்பை பைனலில் இந்திய அணிக்காக மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்பதுதான் என் கனவு" என்று இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி கூறியுள்ளார். உலகக்கோப்பையை வெல்வதுதான் அணியின் இறுதி இலக்கு என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக ஜியோஸ்டார்' சேனலிடம் பேசிய கோலி, தனது போட்டி மனப்பான்மை குறித்தும், இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் வீரராக இருக்க வேண்டும் என்ற தனது ஆசை குறித்தும் மனம் திறந்து பேசினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்த குணம் என்னை விட்டு போகாது
Image Credit : ANI

இந்த குணம் என்னை விட்டு போகாது

"நான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், அணியை வெற்றி பெற வைக்கும் நபராக நானே இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். என் இயல்பே அதுதான். அந்த குணம் என்னை விட்டுப் போகாது. அதனால், அணிக்காக முடிந்தவரை பல போட்டிகளில் வெற்றி தேடித்தர வேண்டும் என்பதே என் இலக்கு. குறிப்பாக, பைனலில் ஸ்கோரை சேஸ் செய்யும்போது ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்பதுதான் என் மிகப்பெரிய கனவு" என்று கோலி கூறினார்.

34
உலகக்கோப்பை வெல்வது தான் முக்கியம்
Image Credit : ANI

உலகக்கோப்பை வெல்வது தான் முக்கியம்

"அது நடந்தால் ரொம்ப சந்தோஷம். ஒருவேளை அப்படி நடக்கவில்லை என்றாலும், நாம் உலகக்கோப்பையை வென்றால் நான் அதே அளவுக்கு மகிழ்ச்சியடைவேன். ஏனென்றால், என்னதான் போட்டி மனப்பான்மை இருந்தாலும், இதுதான் நான் விளையாடும் கடைசி உலகக்கோப்பை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதனால், அந்த கோப்பையை வெல்வதுதான் எல்லாவற்றையும் விட முக்கியம்" என்று விராட் கோலி மேலும் தெரிவித்தார்.

போட்டி மனப்பான்மை வேண்டும்

தொடர்ந்து பேசிய கோலி "களத்தில் நின்று விளையாடும் ஒரு பேட்ஸ்மேனாக, அணியை சரிவிலிருந்து மீட்டுக்கொண்டு வருவதை விட திருப்தியான விஷயம் வேறு எதுவும் இல்லை. அதுதான் இந்த லெவலில் உங்களை போட்டியிட வைக்கிறது. அதனால், அந்த போட்டி மனப்பான்மையை நான் விட்டுவிட விரும்பவில்லை. ஆனால், அதைவிட பெரிய இலக்கு எப்போதுமே சிறந்தது" என்றும் குறிப்பிட்டார்.

44
விராட் கோலியின் இமாலய சாதனைகள்
Image Credit : Instagram

விராட் கோலியின் இமாலய சாதனைகள்

37 வயதான விராட் கோலி இதுவரை இரண்டு ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011-ல் இந்தியா கோப்பையை வென்றபோதும், 2023 பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றபோதும் அவர் அணியில் இருந்தார். 2027 உலகக்கோப்பைதான் கோலியின் கடைசி உலகக்கோப்பையாக இருக்கும்.

டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கோலி, இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த ஆண்டும் அவர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளார். 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 384 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்கள் அடங்கும். அவரது சராசரி 64 ஆக உள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 85 சதங்களை விளாசியுள்ள அவர், உள்ளூரில் 41 சதங்களை அடித்துள்ளார். மேலும், உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் படைத்த 6,976 ரன்கள் என்ற சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 110 ரன்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajit Agarkar: ரோகித் சர்மாவுடன் மோதல்?.. இனி இந்த பதவி வேண்டாம்.. அஜித் அகர்கர் முடிவின் பின்னணி!
Recommended image2
'ஜப்பானுக்கு இதுக்கா போனீங்க'.. பும்ராவை கலாய்த்து தள்ளிய மனைவி சஞ்சனா.. என்ன நடந்தது?
Recommended image3
Asian Games 2026: சிக்ஸர் மழை பொழிந்த இந்திய மகளிர் அணி.. ஆசிய விளையாட்டில் புதிய சாதனை ஸ்கோர்!
Related Stories
Recommended image1
விராட் கோலி, ரோகித்துக்கு ஆபத்தா? பிசிசிஐயின் புதிய விதியால் ரசிகர்களுக்கு ஷாக்!
Recommended image2
India Vs West Indies: ரோஹித், கோலி ரிட்டர்ன்ஸ்! 6 பேருக்கு கல்தா; அகர்கர் போட்ட அதிரடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved