மெஷினை விட வேகமாக அடித்து சச்சின் சாதனையை முறியடித்த கோலி - அதிவேகமாக 27000 ரன்களை கடந்து சாதனை!
Virat Kohli 27000 Runs: இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி, கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 4ஆவது நாள் ஆட்டத்தின் போது சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.
Virat Kohli
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி, கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 4ஆவது நாள் ஆட்டத்தின் போது சர்வதேச கிரிக்கெட்டில்அதிவேகமாக 27,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்தியாவிற்கும், வங்கதேசத்திற்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் முதல் நாள் மழையால் பாதிக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் எடுத்தார். அதன்படி வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து முதல் நாளில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு 2ஆவது மற்றும் 3ஆவது நாட்கள் மழையால் நடைபெறவில்லை.
Virat Kohli Run Out Chance
இந்த நிலையில் தான் இந்தப் போட்டியானது டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 4ஆவது நாள் போட்டியானது இன்று காலை தொடங்கியது. இதில், வங்கதேசத்தின் மோமினுல் ஹக் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் இருவரும் 4ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆனால், ரஹீம் 11 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு வந்த வங்கதேச வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
எனினும் கடைசி வரை நிதானமாக விளையாடிய மோமினுல் ஹக் 194 பந்துகளில் 17 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், பவுலிங்கில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
Virat Kohli Reached 27000 Runs
ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கைப்பற்றி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 7ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். பின்னர் இந்தியா அதிரடியாக முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ரோகித் சர்மா முதல் 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் விளாசி உமேஷ் யாதவ், சச்சின் டெண்டுல்கரின் 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் சாதனையை சமன் செய்தார்.
மேலும், இந்தப் போட்டியில் இந்தியா அதிவேகமாக 50 ரன்கள், 100 ரன்கள், 150 ரன்கள், 200 ரன்கள் கடந்த அணி என்ற சரித்திர சாதனையை படைத்தது. 10.1 ஓவர்களில் 103 ரன்கள் குவித்து தனது சாதனையை தானே முறியடித்தது. இதற்கு முன்னதாக 12 பந்துகளில் சதம் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா 23 ரன்னில் வெளியேறினார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிவேகமாக அரைசதம் அடித்து 72 ரன்களில் வெளியேறினார். சுப்மன் கில் 39 ரன்னிலும், ரிஷப் பண்ட் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த விராட் கோலி ரன் அவுட் மற்றும் ஸ்டெம்பிங்கிலிருந்து தப்பினார்.
Virat Kohli-Shakib Al Hasan
அதிரடியாக விளையாடிய கோலி 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 47 ரன்கள் எடுத்த நிலையில் ஷாகிப் அல் ஹசன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை கடந்த 4ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆனால், அதிவேகமாக 27,000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.
அதிவேகமாக 27,000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியல்:
594 இன்னிங்ஸ் – விராட் கோலி
623 இன்னிங்ஸ் – சச்சின் டெண்டுல்கர்
648 இன்னிங்ஸ் – குமார் சங்கக்காரா
650 இன்னிங்ஸ் – ரிக்கி பாண்டிங்
Virat Kohli
27000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரைத் தொடர்ந்து இலங்கையின் குமார் சங்ககாரா மற்றும் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கோலி 13,906 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோலி 8,918 ரன்கள் எடுத்துள்ளார்.
125 டி20 போட்டிகளில் விளையாடிய கோலி 4,188 ரன்கள் எடுத்திருக்கிறார். டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதைத் தொடர்ந்து சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து கோலி ஓய்வு பெற்றார். தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.