அதிக வரி செலுத்தும் வீரர்களின் பட்டியலில் கோலி முதலிடம்: 2023ல் ரூ.66 கோடி, தோனி எத்தனை கோடி? ரோகித் இல்ல!
உலகளவில் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் பலரும் அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். அதில் குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் அதிக வரி செலுத்துபவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர்கள் யார் என்பதை இந்த பதிவில் காணலாம்.
அதிக வரி செலுத்தும் விராட் கோலி
உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரரும், ரன் மெஷின் என்று அழைக்கப்படுபவருமான விராட் கோலி களத்தில் மட்டுமல்ல, களத்திற்கு வெளியிலும் நிதி பங்களிப்பின் காரணமாக இன்றும் தலைப்புச் செய்தியில் வந்து கொண்டிருக்கிறார்.
வருடத்திற்கு ரூ.1050 கோடி வரையில் வருமானம் ஈட்டும் விராட் கோலி இந்தியாவில் அதிக வரி செலுத்தும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.அதுமட்டுமின்றி அதிக வரி செலுத்தும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் நம்பர் 1 இடமும் பிடித்துள்ளார்.
Virat Kohli Highest Tax Paid Cricket Player
கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் விராட் கோலி ரூ.66 கோடி வரையில் வரி செலுத்தியுள்ளார். இது விராட் கோலியை கிரிக்கெட் ஐகானாக மட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்களிப்பாளராகவும் திகழ்கிறார்.
விராட் கோலி மட்டுமின்றி இந்திய அணியின் கூல் கேப்டன், சிறந்த வின்னிங் கேப்டன் என்று அழைக்கப்படும் தோனியும் இந்திய நாட்டின் பொருளாதாரத்திற்கு தன்னால் முடிந்த வகையில் வரி செலுத்துவதன் மூலமாக உதவுகிறார்.
MS Dhoni Highest Tax Paid Cricketer
விராட் கோலியைத் தொடர்ந்து அதிக வரி செலுத்தும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் எம்.எஸ்.தோனி 2ஆவது இடம் பிடித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் எம்.எஸ்.தோனி ரூ.38 கோடி வரி செலுத்தியுள்ளார்.
தோனியின் வருமானம் விராட் கோலியை விட குறைவாக இருந்த போதிலும் ரூ.38 கோடியை வரியாக கட்டியிருக்கிறார். தோனியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1040 கோடி ஆகும். இவர்களது வரிசையில் மற்றொரு இந்திய வீரரும் இடம் பெற்றுள்ளார்.
அதிக வரி செலுத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்
அவர், வேறு யாருமில்லை, கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தான் அது. உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் சச்சினின் நிகர சொத்து ரூ.1350 கோடி என்று கூறப்படுகிறது. ஆண்டிற்கு அதிகளவில் வருமானம் பெற்று வரும் சச்சின் கடந்த 2023 ஆம் ஆண்டில் ரூ.28 கோடி ரூபாய் வரி செலுத்தி பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளார்.
Highest Tax-Paying Cricketer in India
விராட் கோலி, எம்.எஸ்.தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் வரிசையில் 4ஆவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி ரூ.23 கோடி செலுத்தி பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
தற்போதைய தலைமுறை கிரிக்கெட் பிரபலங்களான ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ரூ.13 கோடி ரூபாயும், ரிஷப் பண்ட் ரூ.10 கோடி ரூபாயும் வரியாக செலுத்தியுள்ளனர்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்டின் நிகர சொத்து மதிப்பு ரூ.100 கோடியாக இருந்த போதிலும், ரூ.10 கோடியை வரியாக செலுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக வரி செலுத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்
இந்தியாவில் அதிக ரசிகர்களால் விரும்பக் கூடிய விளையாட்டாக கிரிக்கெட் திகழும் நிலையில், இந்தியாவில் அதிக வரி செலுத்தும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
கிரிக்கெட் மூலமாக ஏராளமான வீரர்கள் அதிக வருமானம் பெற்று வருகின்றனர். கிரிக்கெட் மூலமாக பிரபலம் அடைந்து, அதன் மூலமாக பிராண்டு ஒப்பந்தம் பெற்று வருடத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் வரையில் சம்பாதிக்கும் அளவிற்கு புகழின் உச்சத்திற்கு சென்ற கிரிக்கெட் வீரர்கள் ஏராளம்.
அவர்களில் விராட் கோலி, எம்.எஸ்.தோனி, ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் என்று பட்டியலை சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
Highest Paid Cricketer In India
ஆனால், இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. அவரது சொத்து மதிப்பு ரூ.214 கோடியாக இருந்தாலும் அவர் அதிகளவில் வரி செலுத்துபவர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை.
அதிகளவில் வரி செலுத்துபவர்களின் பட்டியலில் சினிமா பிரபலங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதற்கிடையில் டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்த பிறகு விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஓய்விற்கு பிறகு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்று விளையாடினார். இதைத் தொடர்ந்து வரும் 19 ஆம் தேதி தொடங்கும் வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.