வைபவ் சூர்யவன்ஷிக்கு 500 மிஸ்டு கால்; வார்னிங் கொடுத்த ராகுல் டிராவிட்!
Vaibhav Suryavanshi Talk about 500 Missed Calls : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் சதமடித்த இளம் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றார்.

வைபவ் சூர்யவன்ஷி
Vaibhav Suryavanshi Talk about 500 Missed Calls : ஐபிஎல் போட்டி முடிந்தாலும் வைபவ் சூர்யவன்ஷியின் புகழ் ஓய்ந்தபாடில்லை. பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம், சதம் அடித்த பிறகு 500க்கும் மேற்பட்ட மிஸ்டு கால்கள் வந்ததாகவும், ஆனால் தான் கவனம் சிதறாமல் இருக்க முயற்சிப்பதாகவும் கூறினார்.
3 - 4 ஆண்டுகள் கிரிக்கெட் பயிற்சி
"கடந்த 3-4 ஆண்டுகளாக கிரிக்கெட் பயிற்சி செய்து வருகிறேன். அந்த உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. என்னுடைய குறைகளை நிவர்த்தி செய்துள்ளேன். கடினமாக இருந்த விஷயங்கள் இப்போது எளிதாகிவிட்டன. கவனம் செலுத்துவது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்துள்ளேன். அணிக்கு தேவையானதைச் செய்ய வேண்டும். எதையாவது செய்து அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று வைபவ் கூறினார்.
500க்கும் மேற்பட்ட மிஸ்டு கால்கள்
ஐபிஎல் போட்டியில் சதம் அடித்த பிறகு 500க்கும் மேற்பட்ட மிஸ்டு கால்கள் வந்ததால் 4 நாட்கள் போனை ஆஃப் செய்து வைத்திருந்தேன். நிறைய பேர் என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் எனக்கு கூட்டத்தில் இருப்பது பிடிக்காது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இருப்பதே எனக்குப் பிடிக்கும்” என்றார்.
இந்திய அண்டர்-19 அணி
ஐபிஎல் தொடருக்குப் பிறகு வைபவ் அடுத்த கிரிக்கெட் போட்டிக்குத் தயாராகி வருகிறார். ஏற்கனவே இந்திய அண்டர்-19 அணியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ், அடுத்த மாதம் இங்கிலாந்து செல்கிறார். அங்கு இந்திய அண்டர்-19 அணி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிராக ஐந்து 50 ஓவர் போட்டிகள் மற்றும் மூன்று நான்கு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இது வைபவ்வுக்கு நல்ல அனுபவத்தைத் தரும். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வைபவ்வை எதிரணி பந்துவீச்சாளர்கள் குறிவைப்பார்கள் என்பதால் எச்சரிக்கையாக விளையாட வேண்டும் என்று ராகுல் டிராவிட் எச்சரித்துள்ளார்.
சூர்யவன்ஷிக்கு ராகுல் டிராவிட் அறிவுரை3
"இதேபோல் விளையாடுங்கள், நன்றாகப் பயிற்சி செய்யுங்கள். ஆனால் அடுத்த ஆண்டு எதிரணி பந்துவீச்சாளர்கள் அதிக தயாரிப்புடன் வருவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். அதனால் நாமும் அதிகமாகத் தயாராக வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும், புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று ராகுல் டிராவிட் அறிவுறுத்தியுள்ளார்.