MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Vaibhav Sooryavanshi: 15 வயதில் உலகளாவிய அங்கீகாரம்.. 'TIME 100 Next' பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி.. மெகா சாதனை!

Vaibhav Sooryavanshi: 15 வயதில் உலகளாவிய அங்கீகாரம்.. 'TIME 100 Next' பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி.. மெகா சாதனை!

Vaibhav Sooryavanshi: இந்திய கிரிக்கெட்டின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, 'டைம்' பத்திரிகையின் 'TIME 100 Next 2026' பட்டியலில் இடம்பிடித்த மிக இளம் வயது நபர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 01 2026, 09:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வைபவ் சூர்யவன்ஷி சாதனை
Image Credit : asianet

வைபவ் சூர்யவன்ஷி சாதனை

இந்திய கிரிக்கெட்டின் 'வொண்டர்கிட்' என்று அழைக்கப்படும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தன் பெயரில் இன்னொரு வரலாற்று சாதனையை சேர்த்துள்ளார். இந்த முறை கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே உலக அளவில் ஒரு மிகப்பெரிய கௌரவத்தை அவர் பெற்றுள்ளார்.

உலகளவில் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் மற்றும் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வளரும் நட்சத்திரங்களை அடையாளம் காணும் புகழ்பெற்ற 'டைம்' (TIME) பத்திரிகையின் 'TIME 100 Next 2026' பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பிடித்துள்ளார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த ஒட்டுமொத்த பட்டியலிலேயே மிகக் குறைந்த வயதுடைய நபர் வைபவ் தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஒரே இந்தியர் இவர் தான்
Image Credit : X

ஒரே இந்தியர் இவர் தான்

இந்த ஆண்டின் (2026) 'TIME 100 Next' பட்டியலில் உலகளவில் விளையாட்டுத் துறையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 7 வீரர்களில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளளார். மேலும், இந்தப் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்தியர் மற்றும் ஒரே கிரிக்கெட் வீரர் இவரே ஆவார்!

'பினோம்' பிரிவில் வைபவுக்கு இடம்

டைம் பத்திரிகை வைபவ் சூர்யவன்ஷியை 'பினோம்' (Phenom) பிரிவில் சேர்த்துள்ளது. விளையாட்டு உலகில் இருந்து இந்த கௌரவமான பட்டியலில் இடம்பிடித்த ஏழு விளையாட்டு வீரர்களில் வைபவும் ஒருவர். இந்தப் பட்டியலில் உள்ள மற்ற முக்கிய விளையாட்டு வீரர்கள்: ஆர்ச் மேனிங் (அமெரிக்கன் கால்பந்து குவாட்டர்பேக்), டைரீஸ் மேக்ஸி (NBA கூடைப்பந்து வீரர்), நவோமி கிர்மா (மகளிர் கால்பந்து வீராங்கனை), ஃபோலரின் பாலோகுன் (கால்பந்து ஸ்ட்ரைக்கர்), அலெக்ஸாண்ட்ரா ஈலா (டென்னிஸ் வீராங்கனை) மற்றும் ஒலிவியா மைல்ஸ் (கூடைப்பந்து வீராங்கனை).

34
சிறு வயதிலேயே சாதனையின் உச்சிக்கு சென்ற வைபவ்
Image Credit : X/@BCCI

சிறு வயதிலேயே சாதனையின் உச்சிக்கு சென்ற வைபவ்

வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் பயணம் ஒரு சினிமா கதை போல சுவாரஸ்யமானது. 2024 ஐபிஎல் ஏலத்தில், அவருக்கு வெறும் 13 வயது இருக்கும்போதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

அடுத்த ஆண்டே ஐபிஎல் தொடரில் அறிமுகமான வைபவ், ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம் அடித்த உலகின் முதல் பேட்டர் என்ற வரலாற்றை உருவாக்கினார். தற்போது அவர் இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

44
சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடிப்பு
Image Credit : BCCI/X

சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடிப்பு

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற பெருமையும் வைபவ் சூர்யவன்ஷியையே சேரும். இதன் மூலம், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பெயரில் நீண்ட காலமாக இருந்த சாதனையை அவர் முறியடித்தார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் வைபவ் தான் மிக இளம் வயது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வைபவ் சூர்யவன்ஷி
விளையாட்டு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Asian Games 2026: இஷான் கிஷான் சரவெடி.. இலங்கையை துவம்சம் செய்த இந்தியா.. பைனலில் பாகிஸ்தானுடன் மோதல்!
Recommended image2
Shubman Gill Net Worth: சுப்மன் கில்லுக்கு இத்தனை கோடி சம்பளமா? சொத்து மதிப்பை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!!
Recommended image3
Virat Kohli: சாதனைக்காக விளையாடினால் என்ன நடக்கும் தெரியுமா? மனம் திறந்த 'கிங்' கோலி!
Related Stories
Recommended image1
Asian Games 2026: இஷான் கிஷான் சரவெடி.. இலங்கையை துவம்சம் செய்த இந்தியா.. பைனலில் பாகிஸ்தானுடன் மோதல்!
Recommended image2
15 வயதிலேயே மாஸ் சம்பவம்! சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved