#INDvsENG பகலிரவு டெஸ்ட்: பிங்க் பந்தில் இங்கிலாந்தை மிரட்ட நீங்க வேணும்; வாங்க.! இந்திய அணியின் அதிரடி முடிவு
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடக்கவுள்ள நிலையில், அந்த போட்டியி 3 ஃபாஸ்ட் பவுலர்களுடன் இந்திய அணி களமிறங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையேயான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடந்த நிலையில், கடைசி 2 போட்டிகள் அகமதாபாத்தில் நடக்கின்றன. பகலிரவு டெஸ்ட் போட்டியாக 3வது டெஸ்ட் வரும் 24ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.
முதலிரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடந்ததால், சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப ஸ்பின்னர்கள் மீது கவனம் செலுத்தி இரண்டே ஃபாஸ்ட் பவுலர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, 3வது டெஸ்ட் பகலிரவு டெஸ்ட் என்பதால் பிங்க் பந்து பயன்படுத்தப்படும். அதனால் அடுத்த போட்டியில் 3 ஃபாஸ்ட் பவுலர்களுடன் களமிறங்க இந்திய அணி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனால், பும்ரா மற்றும் அனுபவ இஷாந்த் சர்மாவுடன் மற்றொரு அனுபவ ஃபாஸ்ட் பவுலரான உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்படவிருப்பதாக தெரிகிறது. வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி ஆடிய முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் பந்தில் வீசிய அனுபவம் கொண்ட உமேஷின் சேர்க்கை இந்திய அணிக்கு வலுசேர்க்கும்.
வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி முதல்முறையாக ஆடிய பகலிரவு டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய மூவரும் இணைந்து அசத்தினர். அவர்களில் ஷமிக்கு பதிலாக இப்போது பும்ரா ஆடவுள்ளார்.