MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஐபிஎல் 2025: அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட டாப் 10 ஐபிஎல் வீரர்கள் – கிளாசென் ரூ.23 கோடி!

ஐபிஎல் 2025: அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட டாப் 10 ஐபிஎல் வீரர்கள் – கிளாசென் ரூ.23 கோடி!

Top 10 Most Expensive Retained Players: ஐபிஎல் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் அதிக தொகைக்கு தக்க வைக்கப்பட்ட டாப் 10 வீரர்களில் ஹென்ரிச் கிளாசென் ரூ.23 கோடிக்கு முதலிடத்தில் இருக்கிறார்.

3 Min read
Rsiva kumar
Published : Nov 02 2024, 08:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Top 10 Most Expensive Retained Players, IPL 2025 Retentions

Top 10 Most Expensive Retained Players, IPL 2025 Retentions

Top 10 IPL 2025 Most Expensive Retained Players: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணிகள் 2025 சீசனுக்கான தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் ஹென்ரிச் கிளாசென் அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட வீரராக உள்ளார். அவரை ரூ. 23 கோடிக்கு SRH தக்கவைத்துள்ளது. டாப் 10 அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரங்கள் இங்கே..

26
Heinrich Klaasen and Virat Kohli, IPL Retention 2025, Most Expensive Retained Players

Heinrich Klaasen and Virat Kohli, IPL Retention 2025, Most Expensive Retained Players

1. ஹென்ரிச் கிளாசென் (SRH)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தென் ஆப்பிரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசெனை ரூ. 23 கோடிக்கு தக்கவைத்துள்ளது. இது ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்பு அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட வீரராக உள்ளது. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இந்த பவர் ஹிட்டர் கடந்த சில ஆண்டுகளாக உலகின் மிகவும் ஆபர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படுகிறார். ஐபிஎல் 2024ல் கிளாசென் 171 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 479 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு அரைசதங்கள் அடங்கும்.

2. விராட் கோலி (RCB)

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரரான விராட் கோலியை ஐபிஎல் 2025க்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) 21 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துள்ளது. 2025ல் ஆர்சிபி கேப்டனாக விராட் கோலி இருப்பார் என்ற செய்திகள் தற்போது வைரலாகி வருகின்றன. ஏனெனில் அந்த அணி கடந்த சீசனில் கேப்டனாக இருந்த பாஃப் டு பிளெசிஸை விடுவித்துள்ளது. ஐபிஎல் 2024ல் கோலி ஒரு சதம், ஐந்து அரைசதங்களுடன் 741 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை வென்றார்.

36
Yashasvi Jaiswal and Nicholas Pooran, IPL 2025, Most Expensive Retained Players

Yashasvi Jaiswal and Nicholas Pooran, IPL 2025, Most Expensive Retained Players

3. நிக்கோலஸ் பூரன் (LSG)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேஎல் ராகுலை விடுவித்து மேற்கிந்திய தீவுகள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரனை ரூ. 21 கோடிக்கு தக்கவைத்துள்ளது. IPL 2025 மெகா ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கப்பட்ட இரண்டாவது அதிக விலை வீரர் பூரன். பூரன் அடுத்த சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக இருக்க வாய்ப்புள்ளது. IPL 2024ல் நிக்கோலஸ் பூரன் 178 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 499 ரன்கள் எடுத்தார்.

4. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (RR)

இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) ரூ. 18 கோடிக்கு தக்கவைத்துள்ளது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு RR தக்கவைத்துள்ள அதிக விலை வீரராக ஜெய்ஸ்வால் உள்ளார். ஜெய்ஸ்வால் கடந்த சீசனில் 155 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 435 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடங்கும். 

46
Sanju Samson and Rashid Khan, IPL 2025 Retention, IPL 2025 Mega Auction

Sanju Samson and Rashid Khan, IPL 2025 Retention, IPL 2025 Mega Auction

5. சஞ்சு சாம்சன் (RR)

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை ஐபிஎல் 2025க்காக ரூ. 18 கோடிக்கு அந்த அணி தக்கவைத்துள்ளது. கடந்த சீசனுடன் ஒப்பிடும்போது அவரது சம்பளம் ரூ.4 கோடி உயர்ந்துள்ளது. சாம்சன் கடந்த சீசனில் RR கேப்டனாக செயல்பட்டு அணியை பிளேஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார். 153 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 531 ரன்கள் எடுத்தார். இதில் ஐந்து அரைசதங்களும் அடங்கும்.

6. ரஷித் கான் (GT)

குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில்லுக்கு பதிலாக ரஷித் கானுக்கு முன்னுரிமை அளித்து முதல் தக்கவைப்பாக எடுத்துள்ளது. ஐபிஎல் 2025க்காக ரஷித் ரூ. 18 கோடி சம்பளம் பெற உள்ளார். ரஷித் கான் கடந்த சீசனில் 12 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

56
Pat Cummins and Ravindra Radeja, IPL 2025, Most Expensive Retained Players

Pat Cummins and Ravindra Radeja, IPL 2025, Most Expensive Retained Players

7. பாட் கம்மின்ஸ் (SRH)

பாட் கம்மின்ஸ் தக்கவைப்பில் அவரது விலை குறைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2024 ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அவரை ரூ. 20.5 கோடிக்கு வாங்கியது, ஆனால் இப்போது  ஐபிஎல் 2025க்காக ரூ. 18 கோடிக்கு தக்கவைத்துள்ளது. கம்மின்ஸ் ஐபிஎல் 2024ல் கேப்டனாக இருந்து ஹைதராபாத் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் தோல்வியடைந்து ஒரு அடி தூரத்தில் கோப்பையைத் தவறவிட்டது. கேப்டன்சியுடன் பந்துவீச்சிலும் கம்மின்ஸ் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

8. ரவீந்திர ஜடேஜா (CSK)

டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும் ரவீந்திர ஜடேஜாவை ரூ.18 கோடிக்கு சிஎஸ்கே தக்கவைத்துள்ளது. IPL 2024ல் ஜடேஜா 160 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 222 ரன்கள் எடுத்தார். மேலும், 14 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும் சிஎஸ்கே ஜடேஜா மீது நம்பிக்கை வைத்துள்ளது.

66
Ruturaj Gaikwad and Jasprit Bumrah, Most Expensive Retained Players

Ruturaj Gaikwad and Jasprit Bumrah, Most Expensive Retained Players

9. ருதுராஜ் கெய்க்வாட் (CSK)

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை ஐபிஎல் 2025 சீசனுக்காக 18 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துள்ளது. இது சிஎஸ்கேவில் அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட வீரர். இவர் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு சமமான தொகையைப் பெற்றுள்ளார். கெய்க்வாட் கடந்த சீசனில் முதல் முறையாக சிஎஸ்கே கேப்டனாக செயல்பட்டார். இருப்பினும், அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழையத் தவறியது.

10. ஜஸ்பிரித் பும்ரா (MI)

வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை மும்பை இந்தியன்ஸ் 18 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துள்ளது. ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் போன்ற மூன்று சீனியர் வீரர்களை பும்ராவை விட குறைந்த விலைக்கே மும்பை அணி தக்கவைத்துள்ளது. உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராகத் தொடரும் பும்ரா.. எந்த அணிக்காக விளையாடினாலும் சிறந்த பலன்களைத் தருவார். கடந்த ஐபிஎல் சீசனில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
டெல்லி கேபிடல்ஸ்
ஐபிஎல் 2025
ரிஷப் பண்ட்
ரோகித் சர்மா
விராட் கோலி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved