107*, 120*, 151: மேகாலயாவிற்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய திலக் வர்மா டி20 வரலாற்றில் புதிய சாதனை
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்து 3 போட்டிகளில் சதம் அடித்து இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் திலக் வர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.
Tilak Varma
டி20 கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்து மூன்று சதங்கள் அடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை இந்திய அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் திலக் வர்மா படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் கடைசி இரண்டு டி20 போட்டிகளில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.
தற்போது சையது முஷ்டாக் அலி கோப்பையில் விளையாடி மீண்டும் சதம் அடித்து வரலாறு படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20யில் இந்திய இடது கை பேட்ஸ்மேனான திலக் வர்மா 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Tilak Varma
டி20யில் திலக் வர்மாவின் புதிய சாதனை
அடுத்ததாக நடைபெற்ற 4வது டி20 போட்டியிலும் திலக் சதம் (120*) அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சையத் முஷ்டாக் அலி டிராபியில் (ஹைதராபாத் vs மேகாலயா), மேகாலயாவுக்கு எதிராக 67 பந்துகளில் 151 ரன்கள் எடுத்து அசத்தி உள்ளார். அவர் 14 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் தனது அதிரடி சதத்தில் 225.37 ஸ்டிரைக் ரேட்டை அடித்து இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த இன்னிங்ஸ் இப்போது T20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.
Tilak Varma
தக்கவைக்கப்பட்ட திலக் வர்மா
ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் திலக் வர்மா தக்கவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா மற்றும் திலக் வர்மா உள்ளிட்ட ஐந்து வீரர்களை மும்பை தக்க வைத்துக் கொண்டது.
Tilak Varma
150+ அடித்த முதல் இந்திய வீரர்
டி20 போட்டியில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார். இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் இதற்கு முன் 147 ரன்கள் எடுத்திருந்த ஸ்ரேயாஸ் ஐயரின் சாதனையை முறியடித்தார்.
Tilak Varma
டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரர் அல்லாதவரின் அதிகபட்ச ஸ்கோர்
152* – கிரஹம் நேபியர் vs Sussex, 2008
151* – திலக் வர்மா vs மேஹாலயா, 2024
147 – ஸ்ரேயாஸ் ஐயர் vs சிக்கிம், 2019
146* – புனீத் பிஷ்ட் vs மிஷோரம், 2021
144* – ஷாலி சௌஹான் vs சிப்ரஸ், 2024