#AUSvsIND கோலி கடைசி டெஸ்ட்டில் ஆடுவதையும் ஆடாததையும் தீர்மானிப்பது இதுதான்..!
First Published Nov 23, 2020, 2:40 PM IST
குவாரண்டின் கெடுபிடி இல்லையென்றால் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஆட வாய்ப்புள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதலில் 3 ஒருநாள் போட்டிகளும் அதைத்தொடர்ந்து 3 டி20 போட்டிகளும் கடைசியாக 4 டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடும் இந்திய கேப்டன் விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு இந்தியா திரும்புகிறார்.

விராட் கோலிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், அவர் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல், நாடு திரும்புகிறார். தோனி குழந்தை பிறந்தபோது, நாட்டுக்காக ஆடினார். ஆனால் கோலி நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்ததுடன், கோலி முழு தொடரிலும் ஆட வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் எழுந்தன.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?