மும்பை கிளப்பில் கைது செய்யப்பட்ட ரெய்னா..!

First Published Dec 22, 2020, 1:20 PM IST

மும்பையில் கிளப் ஒன்றில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
 

<p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா. இந்திய அணிக்காக பல சிறந்த இன்னிங்ஸ்களை ஆடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தவர். 2011ல் இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது, அவரது பங்களிப்பு மிகச்சிறந்தது.&nbsp;</p>

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா. இந்திய அணிக்காக பல சிறந்த இன்னிங்ஸ்களை ஆடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தவர். 2011ல் இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது, அவரது பங்களிப்பு மிகச்சிறந்தது. 

<p>இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்த ரெய்னா, 33 வயதிலேயே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு அறிவித்தார். ஐபிஎல்லிலும் கடந்த சீசனில் ஆடவில்லை. அடுத்த சீசனுக்காக தீவிரமாக தயாராகிவருகிறார்.</p>

இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்த ரெய்னா, 33 வயதிலேயே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு அறிவித்தார். ஐபிஎல்லிலும் கடந்த சீசனில் ஆடவில்லை. அடுத்த சீசனுக்காக தீவிரமாக தயாராகிவருகிறார்.

<p>இந்நிலையில், மும்பையில் ஏர்போர்ட்டுக்கு அருகே உள்ள கிளப் ஒன்றில், தனது நண்பர்கள் மற்றும் பாலிவுட் பாடகர் குரு ரந்த்வா ஆகியோருடன் கலந்துகொண்டார். கொரோனா நெறிமுறைகளை மீறி கிளப்பில் கூட்டம் சேர்ந்ததற்காக ரெய்னா, குரு ரந்த்வா உள்ளிட்ட 34 பேரை மும்பை போலீஸார் கைது செய்தனர்.</p>

இந்நிலையில், மும்பையில் ஏர்போர்ட்டுக்கு அருகே உள்ள கிளப் ஒன்றில், தனது நண்பர்கள் மற்றும் பாலிவுட் பாடகர் குரு ரந்த்வா ஆகியோருடன் கலந்துகொண்டார். கொரோனா நெறிமுறைகளை மீறி கிளப்பில் கூட்டம் சேர்ந்ததற்காக ரெய்னா, குரு ரந்த்வா உள்ளிட்ட 34 பேரை மும்பை போலீஸார் கைது செய்தனர்.

<p>ஐபிசி சட்டப்பிரிவுகள் 188, 269, 34 ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டனர். பின்னர் சுரேஷ் ரெய்னா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சுரேஷ் ரெய்னா கொரோனா சட்ட விதிகளை மீறியதற்காக கைது செய்யப்பட்ட விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>

ஐபிசி சட்டப்பிரிவுகள் 188, 269, 34 ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டனர். பின்னர் சுரேஷ் ரெய்னா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சுரேஷ் ரெய்னா கொரோனா சட்ட விதிகளை மீறியதற்காக கைது செய்யப்பட்ட விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?