MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • காலில் விழாத குறையாக கதறிய ஆர்சிபி – ஈவு இரக்கமே இல்லாம பொளந்த ஹெட், கிளாசென், சமாத் - 287 ரன்கள் குவித்த SRH

காலில் விழாத குறையாக கதறிய ஆர்சிபி – ஈவு இரக்கமே இல்லாம பொளந்த ஹெட், கிளாசென், சமாத் - 287 ரன்கள் குவித்த SRH

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 30ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது முந்தைய அதிக ரன்கள் சாதனையை 287 ரன்கள் குவித்து முறியடித்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Apr 15 2024, 09:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 30ஆவது லீக் போட்டி தற்போது பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

211
Royal Challengers Bengaluru

Royal Challengers Bengaluru

அதன்படி ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர். அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

311
Sunrisers Hyderabad

Sunrisers Hyderabad

அதன் பிறகு ஹென்ரிச் கிளாசென் களமிறங்கினார். இந்தப் போட்டியில் முதல் பவர்பிளேயில் ஹைதராபாத் 76 ரன்கள் குவித்திருந்த நிலையில், 7.1 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.

411
RCB vs SRH IPL 30th Match

RCB vs SRH IPL 30th Match

டிராவிஸ் ஹெட்டின் அதிரடியால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசிய ஹெட் 39 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.

511
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

மேலும், ஹைதராபாத் அணிக்காக அதிவேகமாக சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதோடு, ஐபிஎல் கிரிக்கெட்டில் இதற்கு முன்னதாக அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றார்.

611
Travis Head

Travis Head

இறுதியாக ஹெட் 41 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 102 ரன்களில் ஆட்டமிழந்தார்.  இவரைத் தொடர்ந்து எய்டன் மார்க்ரம் களமிறங்கினார். ஹெட்டைத் தொடர்ந்து அதிரடியை கையில் எடுத்துக் கொடுத்த கிளாசென் தன் பங்கிற்கு சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசி 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

711
IPL SRH, Hyderabad

IPL SRH, Hyderabad

இதன் மூலமாக அதிவேகமாக 200 ரன்களை கடந்தது. இதற்கு முன்னதாக மும்பைக்கு எதிரான போட்டியில் 14.4 ஓவர்களில் 200 ரன்களை கடந்த நிலையில், இந்தப் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக 14.6 ஓவர்களில் 200 ரன்களை கடந்தது.

811

கடைசியில் கிளாசென் 31 பந்துகளில் 7 சிக்ஸர், 2 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அப்துல் சமாத் களமிறங்கினார். அதன் பிறகு ஹைதராபாத் சற்று தடுமாறினாலும் கடைசியில் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்து புதிய சரித்திரம் படைத்தது.

911
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

அப்துல் சமாத் 10 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரி உள்பட 37 ரன்களுடனும், எய்டன் மார்க்ரம் 17 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

1011
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 287 ரன்கள் எடுத்ததன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 8ஆவது ஐபிஎல் போட்டியில் படைக்கப்பட்ட அதிக ரன்கள் சாதனையை தானே முறியடித்து புதிய சரித்திரம் படைத்துள்ளது.

1111
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 2 முறை அதிக ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்த அணி என்ற சாதனையை ஹைதராபாத் படைத்துள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தினேஷ் கார்த்திக்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
விராட் கோலி

Latest Videos
Recommended Stories
Recommended image1
2006-ல் ஆக்கி.. 2026-ல் கிரிக்கெட்.. 42 வயது சகலகலா வீரர்.. ஆனால் முதல் மேட்ச்சில் நடந்த சோகம்!
Recommended image2
T20 WC IND vs NAM.. இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்.. மேட்ச் வின்னர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!
Recommended image3
டி20 உலகக்கோப்பை.. ஹசரங்கா, தீக்‌ஷனா சுழல் வலையில் சிக்கிய அயர்லாந்து.. இலங்கை அணி வெற்றி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved