எனக்கு எதுக்குப்பா வம்பு..? நான் ரஹானேவை பத்தி எதுவும் பேச விரும்பல.. ஊமை குத்தாய் குத்திய கவாஸ்கர்

First Published Dec 26, 2020, 10:18 PM IST

ரஹானேவின் கேப்டன்சியை பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

<p>ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்துவரும் 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியை 195 ரன்களில் சுருட்டிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் அடித்துள்ளது.&nbsp;</p>

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்துவரும் 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியை 195 ரன்களில் சுருட்டிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் அடித்துள்ளது. 

<p>கோலி இல்லாததால் கேப்டன்சி பொறுப்பை ஏற்று செயல்படும் ரஹானே, மிகச்சிறப்பாக கேப்டன்சி செய்தார். பவுலர்கள் சுழற்சி, ஃபீல்டிங் செட்டப், வீரர்களை கையாண்ட விதம் என அனைத்திலுமே சிறப்பாக செயல்பட்டார். ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்ததால், மிக விரைவில் அஷ்வினிடம் பந்தை கொடுத்தது, பார்ட்னர்ஷிப் வளர்ந்துவந்த போதிலும், ஃபீல்டிங் செட்டப்பை மாற்றாதது என கேப்டன்சியில் ஆக்ரோஷம் காட்டினார் ரஹானே.</p>

கோலி இல்லாததால் கேப்டன்சி பொறுப்பை ஏற்று செயல்படும் ரஹானே, மிகச்சிறப்பாக கேப்டன்சி செய்தார். பவுலர்கள் சுழற்சி, ஃபீல்டிங் செட்டப், வீரர்களை கையாண்ட விதம் என அனைத்திலுமே சிறப்பாக செயல்பட்டார். ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்ததால், மிக விரைவில் அஷ்வினிடம் பந்தை கொடுத்தது, பார்ட்னர்ஷிப் வளர்ந்துவந்த போதிலும், ஃபீல்டிங் செட்டப்பை மாற்றாதது என கேப்டன்சியில் ஆக்ரோஷம் காட்டினார் ரஹானே.

<p>ரஹானேவின் சிறப்பான கேப்டன்சி நகர்வுகளை சுட்டிக்காட்டிய வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, கவாஸ்கரிடம் கருத்து கேட்டார். அதற்கு பதிலளித்த கவாஸ்கர், ரஹானேவின் கேப்டன்சி குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. நான் ஏதாவது பேசினால், அப்புறம் மும்பை வீரர்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று சொல்வார்கள் என தெரிவித்தார்.</p>

ரஹானேவின் சிறப்பான கேப்டன்சி நகர்வுகளை சுட்டிக்காட்டிய வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, கவாஸ்கரிடம் கருத்து கேட்டார். அதற்கு பதிலளித்த கவாஸ்கர், ரஹானேவின் கேப்டன்சி குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. நான் ஏதாவது பேசினால், அப்புறம் மும்பை வீரர்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று சொல்வார்கள் என தெரிவித்தார்.

<p>பொதுவாக மும்பையை சேர்ந்த முன்னாள் வீரர்கள், மும்பையிலிருந்து வந்து இந்தியாவிற்கு ஆடும் வீரர்களுக்கு ஆதரவாக பேசுவதையும், அவர்களே அதிகமாக இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றும் விரும்புவார்கள். இது வெறும் பொதுவான குற்றச்சாட்டு மட்டுமல்ல. அது உண்மையும் கூட. மேலும் கோலியின் தவறுகளை வெளிப்படையாக சுட்டிக்காட்டக்கூடியவர் கவாஸ்கர். எனவே, ரஹானேவின் கேப்டன்சி சிறப்பாக இருந்தபோதிலும், அதற்காக மனதுக்குள் மகிழ்ச்சியடைந்த கவாஸ்கர், அவரைப்பற்றி தான் புகழ்ந்து பேசினால் பிரச்னை என்று கூறுவதன் மூலம், மும்பை பாய்ஸுக்கு நாங்கள் ஆதரவாக பேசவில்லை என்றாலும் அவர்கள் திறமையானவர்களே என்பதை சுட்டிக்காட்டும் விதமாக பேசினார்.</p>

பொதுவாக மும்பையை சேர்ந்த முன்னாள் வீரர்கள், மும்பையிலிருந்து வந்து இந்தியாவிற்கு ஆடும் வீரர்களுக்கு ஆதரவாக பேசுவதையும், அவர்களே அதிகமாக இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றும் விரும்புவார்கள். இது வெறும் பொதுவான குற்றச்சாட்டு மட்டுமல்ல. அது உண்மையும் கூட. மேலும் கோலியின் தவறுகளை வெளிப்படையாக சுட்டிக்காட்டக்கூடியவர் கவாஸ்கர். எனவே, ரஹானேவின் கேப்டன்சி சிறப்பாக இருந்தபோதிலும், அதற்காக மனதுக்குள் மகிழ்ச்சியடைந்த கவாஸ்கர், அவரைப்பற்றி தான் புகழ்ந்து பேசினால் பிரச்னை என்று கூறுவதன் மூலம், மும்பை பாய்ஸுக்கு நாங்கள் ஆதரவாக பேசவில்லை என்றாலும் அவர்கள் திறமையானவர்களே என்பதை சுட்டிக்காட்டும் விதமாக பேசினார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?