#AUSvsIND இந்த 2 மாற்றத்தையும் செய்யலைனா இந்தியா மறுபடியும் தோற்பது உறுதி..! கவாஸ்கர் அதிரடி
First Published Dec 21, 2020, 2:59 PM IST
ஆஸி.,க்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள் மற்றும் அணுக வேண்டிய முறை குறித்து முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. குறிப்பாக தொடக்க வீரர் பிரித்வி ஷா 2 இன்னிங்ஸ்களிலுமே ஒரே மாதிரி ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் மொத்தமாகவே 4 ரன்கள் மட்டுமே அடித்தார்.

இந்திய அணி முதல் டெஸ்ட்டிலேயே தோல்வியை தழுவி, டெஸ்ட் தொடரை தோல்வியுடன் தொடங்கிய நிலையில், இனிவரும் போட்டிகளில் இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் மற்றும் எப்படி அணுக வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் ஆலோசனை கூறிவருகின்றனர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?