இத செஞ்சா மட்டும்தான் ஆஸி.,யில் மீண்டும் டெஸ்ட் தொடரை ஜெயிக்க முடியும்..! இந்திய அணிக்கு கவாஸ்கரின் அட்வைஸ்

First Published Dec 10, 2020, 4:26 PM IST

ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை ஜெயிக்க வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்கு வழங்கியுள்ளார்.
 

<p>2018-2019 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. அதன்பின்னர் இப்போதுதான் ஆஸ்திரேலியா சென்றுள்ளது இந்திய அணி. இம்முறையும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.</p>

2018-2019 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. அதன்பின்னர் இப்போதுதான் ஆஸ்திரேலியா சென்றுள்ளது இந்திய அணி. இம்முறையும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

<p>இந்நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை கவாஸ்கர் வழங்கியுள்ளார்.</p>

இந்நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை கவாஸ்கர் வழங்கியுள்ளார்.

<p>இதுகுறித்து கிரிக்கெட் 7 சேனலில் ரிக்கி பாண்டிங் மற்றும் பிரயன் லாராவுடனான வீடியோ காலில் பேசிய கவாஸ்கர், இந்திய அணி அதிகமான ரன்களை குவிக்க வேண்டும். 2 ஆண்டுக்கு முன், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை ஜெயித்தபோது, இந்திய அணி அதைத்தான் செய்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெயிக்க, 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துவதுதான் முக்கியம் என்று நிறைய பேர் சொல்வார்கள். ஆனால் அதேவேளையில் அதிக ரன்கள் அடிக்கவில்லை என்றால், உங்களால் ஜெயிக்க முடியாது.</p>

இதுகுறித்து கிரிக்கெட் 7 சேனலில் ரிக்கி பாண்டிங் மற்றும் பிரயன் லாராவுடனான வீடியோ காலில் பேசிய கவாஸ்கர், இந்திய அணி அதிகமான ரன்களை குவிக்க வேண்டும். 2 ஆண்டுக்கு முன், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை ஜெயித்தபோது, இந்திய அணி அதைத்தான் செய்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெயிக்க, 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துவதுதான் முக்கியம் என்று நிறைய பேர் சொல்வார்கள். ஆனால் அதேவேளையில் அதிக ரன்கள் அடிக்கவில்லை என்றால், உங்களால் ஜெயிக்க முடியாது.

<p>தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 60 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. ஆனாலும் 2-1 என தொடரை தோற்றது. இங்கிலாந்துக்கு எதிராக 2018ல் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மொத்த 100 விக்கெட்டில், 95-97 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணி. ஆனாலும் தொடரை இழந்தது. எனவே டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துவதுடன், அதிகமான ரன்களையும் அடித்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மீண்டும் டெஸ்ட் தொடரை வெல்ல நினைத்தால் அதை செய்தாக வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.</p>

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 60 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. ஆனாலும் 2-1 என தொடரை தோற்றது. இங்கிலாந்துக்கு எதிராக 2018ல் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மொத்த 100 விக்கெட்டில், 95-97 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணி. ஆனாலும் தொடரை இழந்தது. எனவே டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துவதுடன், அதிகமான ரன்களையும் அடித்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மீண்டும் டெஸ்ட் தொடரை வெல்ல நினைத்தால் அதை செய்தாக வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?